மேஷம்: உங்கள் உள்ளுணர்வுகளின் அடிப்படையில் செயல்படுவீர்கள். அதனால் நீங்கள் அனைத்து திட்டங்களையும் சிறந்த வகையில் அமைப்பீர்கள். இன்று மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். எனினும் சிறிது ஏமாற்றம் ஏற்படக்கூடும். ஆனால் அதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.
ரிஷபம்: ஒரு மேலாளராக, நீங்கள் நிறுவனத்திற்கு சிறந்த வகையில் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்து, சக ஊழியர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அலுவலகத்தில் அனைவரையும் கருத்துக்களையும் கேட்டறிந்து, அவர்கள் கூறும் கருத்துகளுக்கு ஏற்ப முடிவெடுத்துச் செயல்படுவீர்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இக்கட்டான கால நிலையை சமாளிக்கும் நிலையும் ஏற்படும்.
மிதுனம்: இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். வாழ்க்கையின் அரிய தருணங்களை நினைத்துப் பார்த்து கடவுளுக்கு நன்றி தெரிவிப்பீர்கள். எனினும், தனிப்பட்ட விஷயம் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் குழப்பங்கள் இருக்கக்கூடும். ஏதேனும் ஒரு பொருளை விற்கவும், வாங்கவும் இன்று பொருத்தமான நாளாகும்.
கடகம்: அலுவலகத்தில் நீங்கள், செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். அதே நேரத்தில் பலவிதமான எண்ணங்கள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இதனால் சில கவனச்சிதறல் ஏற்பட்டாலும், அதிலிருந்து விலகி பணியில் கவனம் செலுத்துவீர்கள். மனதிற்குப் பிடித்தவருடன், நேரத்தைச் செலவிடுவதற்காக பணியை விரைந்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.
சிம்மம்: உங்களுக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன், பயணம் மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றை வகுக்கும் சாத்தியக்கூறு உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்கள், பலரது பாராட்டைப் பெறுவார்கள்.
கன்னி: குறிக்கோளை நிறைவேற்ற மனதை ஒருமுகப்படுத்தி செயல் புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும். முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால், உங்களது நிர்வாகத் திறன்கள் மேலும் அதிகரிக்கும்.
துலாம்: இன்று வேலைப்பளு அதிகம் இருக்கும். அதன் காரணமாக நீங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். மோசமான சூழ்நிலைகள் மற்றும் கவலைகள் காரணமாக உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். எனினும் மன உறுதியுடன் சூழ்நிலையைத் தைரியமாக எதிர் கொண்டால், நிலைமை சீராகும்.
விருச்சிகம்: இன்று பல நிகழ்வுகள் ஏற்படும் நாள். அனுபவம் மூலம் பாடங்களை கற்க மூத்தவர்கள் மற்றும் மேலதிகாரிகள் சொல்வதை கவனமாகக் கேட்கவும். அவர்கள் ஒத்துழைப்பை உங்களுக்கு வழங்குவார்கள். நீதிமன்றங்கள் தொடர்பான விஷயங்களில் விலகி இருக்கவும். இதனால் பாதிப்புகள் ஏற்படலாம்.
தனுசு: இன்று மிகவும் குழப்பம் மிகுந்த நாளாகும். பல்வேறு விஷயங்கள் தொடர்பாக என்ன செய்வது என்று திட்டமிடப்படாத நாளாகவும் இருக்கும். அமைதி இருக்காது. அதற்காக கவலை கொள்ளத் தேவையில்லை. குழப்பங்களை தீர்க்க மன உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
மகரம்: இன்று, தேவையற்ற செலவின் காரணமாக பணவிரயம் ஏற்படலாம். ஆனால், இன்று நிதி நிலைமை மேம்படும் என்பதால் மகிழ்ச்சி கொள்ளவும். பணவரவு ஏற்படும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. மற்றபடி இன்றும் சாதாரணமான நாளாக இருக்கும்.
கும்பம்: கனவு இல்லம் அல்லது வாகனம் கைகூடும் வாய்ப்புள்ளது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், புதிய சொத்துக்கள் வாங்கக் கூடும். அதனால் அது தொடர்பான விவரங்களை சேகரித்து, கடன் விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கவும். கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதற்கு இது சிறந்த நாளாக இருக்கும்.
மீனம்: இன்று மிகவும் பதட்டமான மனநிலை இருக்கும். எவரேனும் ஒருவருடன், ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஏற்பட்ட கருத்து வேறுபாடு இதற்கு காரணமாக இருக்கலாம். உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் கூட, உங்களுக்கு மன ஆறுதல் தர முடியாத நிலை இருக்கும். தியானப் பயிற்சியில் ஈடுபட்டால், மன அமைதி ஏற்பட்டு தினசரி பணிகளை தொடர இயலும்.