ETV Bharat / state

3 பேரை ஏமாற்றி வாடகை காரை கடத்தி சென்ற நபர்.. வேலூரில் அதிர்ச்சி சம்பவம்! - RENT CAR THEFT IN VELLORE

வேலூரில் வாடகைக்கு கார் வேண்டுமென்று கூறி அக்கார் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது.

வேலூர் பெயர் பலகை, திருடு போன  கார்
வேலூர் பெயர் பலகை, திருடு போன கார் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 8:56 PM IST

வேலூர்: மூன்று பேரை ஏமாற்றி வாடகை கார் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலுார் மாவட்டம், திருமலைக்கோடி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் கார்களை வாடகைக்கு விடும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இவர் தன்னுடைய இனோவா (Innova) கார் திருடப்பட்டுள்ளதாக வேலுார் தெற்கு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், ஆய்வாளர் காண்டீபன் மற்றும் உதவி ஆய்வாளர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சி (ETV Bharat Tamilnadu)

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், "கார் வாடகை விடும் தமிழ்செல்வனுக்கு தெரிந்த நபர் டோல்கேட் பகுதியை சேர்ந்த ஹரிஹரன். இவர் கார் டிரைவராக பணிபுரியும் சலவன்பேட்டையை சேர்ந்த ஹரிஷ்விக்கியை தொடர்பு கொண்டு, ஆக்டிங் டிரைவராக செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஹரிஷ்விக்கி ஒப்புக்கொண்டதை அடுத்து, வாடிக்கையாளர் பரமேஸ்வரன் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஹரிஷ்விக்கி வாடிக்கையாளர் பரமேஸ்வரனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, என்னிடம் கார் இல்லை, காரை வாடகைக்கு எடுத்து வருமாறு பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனால், இது குறித்த தகவலை ஹரிஷ்விக்கி ஹரிஹரனிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கார் வாடைகைக்கு தமிழ்செல்வனை தொடர்பு கொள்ளுமாறு ஹரிஷ்விக்கியிடம் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, ஹரிஷ்விக்கி தமிழ்செல்வனை தொடர்பு கொண்டு, இனோவா காரை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி வாடகைக்கு எடுத்துள்ளார். தொடர்ந்து வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் வாடிக்கையாளர் பரமேஸ்வரனை ஹரிஷ்விக்கி பிக் அப் செய்துள்ளார். அந்த சமயத்தில், வாடிக்கையாளர் பரமேஸ்வரன் தனக்கு மற்றொரு கார் வேண்டும் என்றும் டிரைவர் வேண்டாம், நானே ஓட்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனால், ஹரிஷ்விக்கி தமக்கு தெரிந்த நபரிடமிருந்து ஸ்விப்ட் (Swift) காரினை எடுத்து வந்துள்ளார். அதன்படி, ஹரிஷ்விக்கி ஸ்விப்ட் காரிலும், வாடிக்கையாளர் பரமேஸ்வரன் வாடகைக்கு எடுத்த இனோவா காரிலும் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: பகலில் வடை கடை வியாபாரம்.. இரவில் திருட்டு - பலே திருடன் சிக்கியது எப்படி?

இதற்கிடையில் வாடிக்கையாளரின் ஆதார் விவரங்களை ஹரிஷ்விக்கி கேட்டுள்ளார். அதற்கு, தருகிறேன் என்று வாடிக்கையாளர் சமாளித்துள்ளார். இதனையடுத்து, இருவரும் திருப்பதிக்குச் சென்றுள்ளனர். அங்கு ஓட்டலில் தங்குவதற்கு ஹரிஷ்விக்கியின் ஆதாரங்களை பயன்படுத்தியுள்ளனர். பின்னர், இருவரும் அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அருகே சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு வாடிக்களையாளர் வாடகை காரினை எடுத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், காரின் உரிமையாளர் தமிழ்செல்வன், கார் எங்கு செல்கிறது என்பதை கண்டறியும் வகையில் ஜிபிஎஸ் மூலமாக சோதனை செய்துள்ளார். இதில், கார் திருப்பதி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து, தமிழ்செல்வன் ஹரிஷ்விக்கியை தொடர்பு கொண்டுள்ளார். இதில், தான் ஓட்டல் அறையில் இருப்பதாகவும், வாடிக்கையாளர் காரை எடுத்துச்சென்றதாக ஹரிஷ்விக்கி தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஹரிஷ்விக்கி வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு விரைந்து வருமாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வாடிக்கையாளர் தனது தொலைப்பேசி தொடர்பை துண்டித்துள்ளார். இதனால், ஹரிஷ்விக்கி அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, காரில் இருந்த ஜிபிஎஸ் கருவி செயல்படாமல் போயுள்ளது. இந்த நிலையில் காரை வாடிக்கையாளர் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, வாடிக்கையாளர் யாருக்கு தெரிந்தவர் என்று விசாரித்த நிலையில், அவர் யாருக்கும் தெரியாத நபர் என்பதும், ஹரிஹரனுக்கு ஆன்லைன் மூலமாக அறிமுகமானவர் என்பது தெரியவந்துள்ளது. ஒரே நேரத்தில் 3 பேரை ஏமாற்றி வாடிக்கையாளராக வந்த பரமேஸ்வரன் காரை திருடி சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வேலுார் தெற்கு போலீசார் BNS, 2023 316(2), 318(4) என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, கார் சென்ற சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.