சென்னை: நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் ஷ்ரவன் குமார் ரெட்டி. இவர் கடந்த 4ஆம் தேதி அன்று சென்னை ராயப்பேட்டை பூரம் பிரகாசம் சாலையில் உள்ள வீடு ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவுடன் சேர்ந்து சோதனை நடத்தியுள்ளார். அப்போது அந்த வீட்டில் சட்டவிரோதமாக 2000 போலி ரூபாய் தாள்களை கேரளாவை சேர்ந்த ரஷீத் அழிக்கோடன் தேகத் என்பவர் வைத்திருந்துள்ளார்.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஷ்ரவன் குமார் ரெட்டி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ரஷீத் அழிக்கோடன் தேகத் (41) என்பவரிடமிருந்து 9.48 கோடி 2000 ரூபாய் போலி தாள்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: தங்கம் கடத்தி வந்ததாக பெண்ணின் தாலி செயினை பறிமுதல் செய்த சுங்க அதிகாரி...சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்! - HC CONDEMNS CUSTOMS OFFICER
பின்னர் அவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணம் மூலம் ஏமாற்றுதல், பதுக்குதல் ஆகிய குற்றத்திற்காக 180,180(2),380 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவரை ஏமாற்றும் நோக்கில் போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ரஷீத் அழிக்கோடன் தேகத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.