திருவள்ளூர்: மத்திய அரசின் உயரிய விருதான அர்ஜுனா விருது திருவள்ளூரைச் சேர்ந்த பாரா பேட்மிட்டன் வீராங்கனை மனிஷா ராமதாஸுக்குக் கிடைத்துள்ளது. இவர் கடந்த 9 ஆண்டுகளாக பாரா பேட்மிட்டன் வீரராக உள்ள நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டி, பாராலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இந்த நிலையில், இவருக்கு விளையாட்டில் சாதிப்போருக்கு வழங்கப்படும் முக்கிய விருதான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய மனிஷா ராமதாஸ், "என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எனது அப்பா, அம்மா மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி. நான் எதிர்பார்த்தது போல் அர்ஜுனா விருது கிடைத்துவிட்டது. அதற்கு முதலில் நான் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையும் படிங்க: அர்ஜுனா விருது: பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பெருமிதம்!
அர்ஜுனா விருது எனக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும். வருங்காலத்தில் பல சாதனைகள் புரிய நம்பிக்கை தருகிறது. தற்போது என்னுடைய இலக்கு 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலில் நடைபெற இருக்கும் பாரா ஒலிம்பிக்ஸில் தங்கம் பதக்கம் வெல்வது தான்.
தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு ஒன்றிய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி!#KhelRatnaAward பெற்றுள்ள @DGukesh மற்றும் #ArjunaAward பெற்றுள்ள @Thulasimathi11, @07nithyasre, #ManishaRamadass மற்றும்… pic.twitter.com/pAQBm2evqb
— M.K.Stalin (@mkstalin) January 2, 2025
முதலமைச்சர் அவரது எக்ஸ் தளத்தில் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வானதும் மாநில அரசு சார்பில் முதலமைச்சரும் துணை முதலமைச்சர் உதயநிதியும் எங்களைச் சந்தித்து 7 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினர்.
அந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும், பாரா ஒலிம்பிக்ஸில் நான் பதக்கம் வென்று திரும்பிய போது எனக்கு ஒரு கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினர். இது போன்று தமிழக அரசு தொடர்ந்து விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும்," என்று கூறினார்.