ETV Bharat / state

திருநெல்வேலி டூ காசி.. கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம்! பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? - SPECIAL TRAIN FOR KASI

காசி கும்பமேளா நிகழ்வுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்றுலா ரயிலை இயக்க, இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்(ஐஆர்சிடிசி) ஏற்பாடு செய்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (@GMSRailway, @IRCTCofficial)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 10:47 PM IST

மதுரை: காசி கும்பமேளா நிகழ்வு செல்லும் பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து காசிக்கு 12 நாட்கள் சுற்றுலா செல்ல, நபர் ஒருவருக்கு ரூ, 26 ஆயிரத்து 850 வசூலிக்கப்படுகிறது என இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி- IRCTC) தெரிவித்துள்ளது.

உத்திர பிரதேசத்தில் உள்ள காசியில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறம். இந்த விழாவில் காசி கங்கை நதியில் புனித நீராட பொதுமக்கள் விரும்புவர். அந்த வகையில், இந்த ஆண்டு காசி கும்பமேளாவிற்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக, தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

திருநெல்வேலி டூ காசி:

“பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக காசிக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சிறப்பு சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் இருந்து பிப்ரவரி 5 அதிகாலை 01.00 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து, மதுரையிலிருந்து காலை 6 மணிக்கு காசிக்கு புறப்பட்டு, பிப்ரவரி 7 மதியம் 12.30 மணிக்கு காசி பனாரஸ் சென்றடைகிறது.

சுற்றுலா ஏற்பாடு:

இதனையடுத்து, பிப்ரவரி 7 மாலை கங்கா ஆரத்தி பார்த்து, மறுநாள் (பிப்ரவரி 8) முழுவதும் பிராக்யாராஜ் பகுதியில் சுற்றுலா செல்லுதல். தொடர்ந்து, பிப்ரவரி 9 காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காலபைரவர், சாரநாத் கோவில்களுக்கு சுற்றுலா செல்லுதல். பிப்ரவரி 10 அயோத்தியா சரயு நதி மற்றும் ராம ஜென்ம பூமி கோயிலில் வழிபாடு செய்து, அன்று இரவு திருநெல்வேலிக்கு புறப்படும்படி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, சுற்றுலா ரயில் பிப்ரவரி 13 அதிகாலை 02.50 மணிக்கு மதுரை வந்து, மீண்டும் காலை 07.30 புறப்பட்டு திருநெல்வேலி சென்றடைகிறது. இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

ரயில் கட்டணம்:

இந்த, 12 நாள் சுற்றுலாவுக்கு ரயில் பயண கட்டணம், தங்குமிடம், பயண வழிகாட்டி, பாதுகாப்பு அலுவலர், தென்னிந்திய உணவு வகைகள், உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து உட்பட குறைந்த கட்டணமாக, நபர் ஒருவருக்கு ரூ, 26,850 வசூலிக்கப்படுகிறது.

குளிர்சாதன ரயில் பெட்டி பயணம் மற்றும் உயர் சிறப்பு வசதிகளுக்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.38 ஆயிரத்து 470 மற்றும் ரூ.47 ஆயிரத்து 900 வசூலிக்கப்படுகிறது. கட்டணத்திற்கு ஏற்ப ரயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த சுற்றுலா ரயிலுக்கு பயணச்சீட்டு பதிவு செய்ய 8287931977 மற்றும் 8287932122 என்ற அலைபேசி எண்களில் மதுரை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்” என ஐஆர்சிடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.