ஹைதராபாத்:தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பின்னர் 20 ஓவர் உலக கோப்பையையும், 11 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐசிசி கோப்பையையும் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஐசிசி இந்தியாவிற்கு சாதகமாக நடந்து கொண்டதாக மைக்கேல் வாகன் பல விமர்சனங்களை தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, "ட்ரினிடார் நகரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு நடைபெற்றது. ஆனால், இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி காலை 6 மணிக்கு நடந்தால் இந்திய ரசிகர்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என அப்போட்டி கயானா மைதானத்தில் தான் நடக்கும் என ஐசிசி அறிவித்தது.
இதனால் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்தியா விளையாடிய போட்டியை ரசிகர்கள் கண்டுகளித்தனர். இவ்வாறு ஐசிசி இந்தியாவிற்கு சாதகமாகவும், மற்ற அணிகளுக்கு அநியாயம் செய்வதாகவும் விமர்சனம் செய்தார். இப்போட்டி ஒருவேளை ட்ரினிடார் நகரிலேயே நடைபெற்றிருந்தால் இந்தியாவை தங்களுடைய இங்கிலாந்து அணி வென்றிருக்கும்" எனவும் தெரிவித்தார்.