ஐதராபாத்:பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் கோப்பை பிப்.19 ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனாக இருக்கும் பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அந்த வகையில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த போட்டிக்காக உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கு மத்தியில், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விலையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக ஒரு டிக்கெட்டின் விலை பாகிஸ்தான் மதிப்பில் 1000 முதல் தொடங்குகிறது. அதுவே இந்திய மதிப்பில் வெறும் ரூ. 310 மட்டுமே. 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை காண பாகிஸ்தான் நிர்ணயித்துள்ள டிக்கெட்டின் விலை எந்த அளவுக்கு மலிவு என்றால், இந்தியாவில் ஒரு கிலோ பன்னீரின் விலையை விட குறைவு என சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தியாவில் பன்னீர் ஒரு கிலோ சராசரியாக 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடக்கும் குழு-நிலை போட்டிகளுக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை 1000 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போட்டியை காண ரசிகர்களை இழுக்க நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், ராவல்பிண்டியில் பாகிஸ்தான் - வங்க தேசம் இடையிலான முக்கிய போட்டிகளுக்கு, டிக்கெட் விலை 2000 PKR (620 INR) இல் தொடங்குகிறது. அரையிறுதி டிக்கெட்டுகள் 2,500 PKR இல் இருந்து (776 INR) தொடங்குகிறது.