ETV Bharat / sports

70 பந்துகளில் அதிவேக சதம்... பெண்கள் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா! - SMRITI MANDHANA CENTURY

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 500+ பவுண்டரிகள் மற்றும் 50+ சிக்ஸர்களை அடித்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா (கோப்புப்படம்)
ஸ்மிருதி மந்தனா (கோப்புப்படம்) (credit - IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 4:58 PM IST

ராஜ்கோட்: மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்மிரித் மந்தனா பெற்றார். மேலும், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 500+ பவுண்டரிகள் மற்றும் 50+ சிக்ஸர்களை அடித்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா தக்க வைத்துள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் இன்று (ஜன.15) நடந்த அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை பட்டியலில் இடம்பெற்றுள்ள ஸ்மிருதி மந்தனா இதுவரை 10 சதங்களை அடித்துள்ளார். மேலும், இந்த சதத்தின் மூலம் இங்கிலாந்தின் டாம்சின் டில்லி பியூமொண்ட் சாதனையை மந்தனா சமன் செய்துள்ளார். அதிக சத பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லானிங் 15 சதங்களுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் சுசி பேட்ஸ் 13 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க: 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களை திருப்பி தரும் மனு பாக்கர்...!

அத்துடன், 70 பந்துகளில் சதம் அடித்துள்ள மந்தனா, இந்திய வீரரின் அதிவேக சதம் என்ற ஹர்மன்பிரீத் கவுரின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக ஹர்மன்பிரீத் கவுர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 87 பந்துகளில் சதம் அடித்திருந்தது அதிவேக சதமாக இருந்து வந்தது.

மேலும், 28 வயதான ஸ்மிரித் மந்தனா, தற்போது மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சிக்சர்களை அடித்துள்ளார். அதன்படி, மந்தனா இப்போது 52 சிக்ஸர்களுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுருக்கு சமமாக உள்ளார். சர்வதேச அளவில் தற்போது 89 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டியான்ட்ரா டாட்டின் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.