ETV Bharat / opinion

மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் பைரன் சிங்கின் அரசியல் அஸ்தமனம்! - PRESIDENT RULE IN MANIPUR

மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி என்பது அங்கு முதலமைச்சராக இருந்து பதவி விலகிய பைரன் சிங், அரசியல் வாழ்க்கையின் அஸ்தமனம் என டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் நரேந்திர தேவ் குறிப்பிடுகிறார்.

மணிப்பூரில் ரோந்துப் பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள்
மணிப்பூரில் ரோந்துப் பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2025, 5:46 PM IST

BY நரேந்திர தேவ்

ஹைதராபாத்: அரசியலில் முன் எப்போதும் இல்லாத வகையில் வரம்பற்ற அதிகாரமும் மற்றும் பாதுகாப்பையும் மத்திய அரசு வழங்கி இருந்த நிலையில் முதலமைச்சர் என்.பைரன் சிங் பதவி விலகியதை அடுத்து மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மணிப்பூர் சட்டப் பேரவையில் தமக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற நிலையில் அவர் பிப்ரவரி 9ஆம் தேதியே முதலமைச்சர் பதவியை ராஜிநாாமா செய்தார்.

இது முதல் அத்தியாயம் தான். அடுத்தடுத்த அத்தியாயங்களாக பிப்ரவரி 13ஆம் தேதி மாலை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. "இந்திய குடியரசுத் தலைவரான திரெளபதி முர்மு எனும் நான், மணிப்பூர் மாநில ஆளுநரிடம் இருந்து அறிக்கை ஒன்றைப் பெற்றேன். அறிக்கையின் அடிப்படையிலும், என்னால் பெறப்பட்ட இதர தகவல்களின் படியும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகளில் கூறப்பட்டபடி மாநில அரசு கடமையாற்ற முடியாத நிலை எழுந்திருக்கிறது என்பதை அறிந்து அதிருப்தியுற்றேன்,"என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை அடுத்து பாதுகாப்புப்படையினர் குவிப்பு
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை அடுத்து பாதுகாப்புப்படையினர் குவிப்பு (PTI)

பைரன் சிங்கின் தோல்வி: 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தொடங்கிய இன மோதல் தொடர்ந்த சூழலில் பைரன் சிங் விலகல் நிகழ்ந்திருப்பதை காண முடிகிறது. இன மோதல் முடிவுக்கு வராமல் எதிர்பார்க்காத அளவுக்கு பதற்றம் இன்னும் தொடர்ந்து இருக்கிறது. எந்த சூழலிலும் மெய்தி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் இம்பால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குக்கி பழங்குடி மக்கள் செல்ல முடியாது. அதே நேரத்தில் மணிப்பூர் இந்துகள் (மெய்தி சமூகத்தினர்) சூரசந்த்பூர் மலைப்பகுதிகளுக்கு செல்ல முடியாது.

மாநிலத்தின் அடிவேரில் இருக்கும் பிரச்னைகளை அறிந்து அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்ற கண்ணோட்டத்தில் முதலமைச்சர் செயல்படுவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் பைரன் சிங் தோற்றுவிட்டார்.

இம்பாலில் அதிகாரம் படைத்த பதவியில் இருந்து பைரன் சிங் அகற்றப்பட்டது ஒரு அரசியல் ரீதியிலான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் சில கேள்விகளுக்கு விடை தேடவேண்டிய தேவையும் எழுந்துள்ளது. டெல்லி உயர் மட்டத்தின் ஆசி பெற்ற மாநில முதலமைச்சராக இருந்த பைரன் சிங், அந்த ஆசியுடன் மெய்தி சமூகத்தினர் நலனுக்கான தலைவராக எழுச்சி பெற வேண்டும் என்று முயற்சித்தார். ஆனால், அவரது திட்டம் அவருக்கு எதிராக திரும்பி விட்டது.

இம்பாலில் ஒரு பாலத்தின் முன் கவச வேனுடன் நிற்கும் பாதுகாப்புப்படையினர்
இம்பாலில் ஒரு பாலத்தின் முன் கவச வேனுடன் நிற்கும் பாதுகாப்புப்படையினர் (PTI)

வன்முறைக்கு காரணம்: 2017ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை அடுத்து முதலமைச்சராக இருந்த ஓக்ராம் இபோபி சிங் பதவி விலகினார். அவரது இடத்துக்கு பைரன் சிங் வருவார் என்று பலரும் நினைத்திருந்தனர். அப்படி இருந்த சூழலில் அந்த இடத்தை அவரால் பிடிக்க முடிந்தது.

இம்பால் நகரில் உள்ள உள்ளூர் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், "பைரன் சிங் மோசமான வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவரது சொந்த சமூக மக்களான மெய்தி மக்கள் மீதே குற்றம் சாட்டத் தொடங்கினார். பழங்குடியினர் அந்தஸ்து தர வேண்டும் என்று கூறியது வன்முறைக்கு காரணமாக இருந்து விட்டது. வெளிநாட்டை சேர்ந்த குடிபெயர்ந்தோர் தான் இந்த வன்முறைக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். தமது சொந்த தோல்வியை மறைப்பதற்காக இதையெல்லாம் செய்தார். இவையெல்லாம் சேர்ந்து சரியான தருணத்தில் அவரது அரசியல் அஸ்தமனத்தை எழுதி விட்டது," என்றார்.

குடியரசு தின நிகழ்வை முன்னிட்டு பத்திரிகையாளர்கள் இம்பால் சென்றனர். மணிப்பூரில் பதற்றம் குறைந்திருக்கும் என்று அவர்கள் எதி்பார்த்தனர். இது போன்ற சூழலுக்கு இடையேயும் மாலை நேரங்களில் இம்பால் சந்தை வழக்கம் போல இயங்கியது. அனைத்து மகளிர் சந்தையில் இரண்டு பெண் தொழில்முனைவர்களை சந்தித்தேன். கவரிங் நகைகளை விற்பனை செய்து வரும் மீமா லைஸ்ராம் என்ற பெண், மாநில அரசின் உறவுகளில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். "காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே தோல்வியடைந்து விட்டன. நான் பழைய கம்யூனிசவாதி, நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கிறேன். மணிப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கடுமையாக உழைக்க வேண்டும்,"என்று அவர் கூறியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாகும்.

இம்பாலில் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்
இம்பாலில் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் (PTI)

இன்னொரு தொழில்முனைவோரான நிர்மலா தேவி, "தொடரும் வன்முறையை கட்டுப்படுத்தாத நிலையில் பைரன் சிங் தோல்விடைந்து விட்டார் என்ற நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மத்திய அரசும் ஏன் அவர் முதல்வர் பதவியில் தொடர அனுமதித்தனர்? மியான்மரில் இருந்து புலம்பெரயர்ந்தவர்கள் வருகையின் காரணமாக குக்கி மக்கள்தொகை அதிகரித்துள்ளது என்பது உண்மை. கசகசா சாகுபடி, பைரன் சிங்கின் போர் என்பது இன்னொரு அம்சமாகும்,"என்றார்.

மணிப்பூர் அரசின் சீர்குலைவு

ஆனால், பைரன் சிங்கின் பெரிய தோல்வி என்பது, அரசின் துறைகள் நிலைகுலைந்து விட்டதாகும். "அவர் அடிக்கடி ஆணவம் மிகுந்தவராக இருந்தார். அதிகாரிகளிடம் கூட காரணம் இன்றி அப்படி இருந்தார். நாங்களும், எங்களுடைய மூத்த அதிகாரிகளும் ஹிட்லரின் உத்தரவுகளை எதிர் கொண்டோம்,"என இந்த சூழல் குறி்த்து காவல்துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். பைரன் சிங் அதிகார துஷ்பிரயோம் செய்தார் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

கடைசி சில மாதங்களில் தலைநகரில் உள்ள சமூக பணியாளர்கள் மற்றும் இதர துறைகளை சேர்ந்தோர் மற்றும் குக்கி சமூகத்தினர் அதிகம் கொண்ட சூரசந்த்பூர் பகுதியினர் முதலமைச்சர் பைரன் சிங் கவனம் என்பது அரசாட்சியிலோ, மாநிலத்திலோ அல்ல என்பதை உணர்ந்தனர். டெல்லி மேலிடம் தமக்கு எதிராக செயல்படுவார்களோ அல்லது தமக்கு பதிலாக வேறு யாரையும் நியமித்து விடுவார்களோ என தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஆராய்வதிலும் அல்லது உற்று நோக்குவதில் பைரன் சிங் ஈடுபட்டார்.

சூரசந்த்பூர் பகுதியை சேர்ந்த குக்கி சமூகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், தமக்கு எதிராக என்ன தவறாக நடக்கிறது என்பது பெரும்பாலும் முதலமைச்சரே அதற்கு பொறுப்பு என இருக்கிறார், என்றார்.

இம்பாலில் ஆதிக்கம் செலுத்தும் மெய்தி சமூகத்தினரை இரண்டு முக்கிய விஷயங்கள் ஆழமான கவலைக்கு உள்ளாகி இருப்பதாக உணர்கின்றனர். நிலையான எந்த நீதி பரிபாலனையையும் பின்பற்றாமல் சொந்த பாணியில் நீதி வழங்கும் கங்காரு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்பது அவர்களது முதல் கவலையாக இருக்கிறது.

அண்மையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பைரன் சிங் தலைமையிலான காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை. ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் கொய்ரெங் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், தங்களது புலனாய்வின் அடிப்படையில் இம்பாலின் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான கைடெம் நோங்டம் கங்கன்பாவுக்கு எதிராக தண்டனை அளிக்கப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.

தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுவான இது கடந்த ஜனவரி 14ஆம் தேதி, 28 வயதான பெண்ணை இம்பாலில் உள்ள விடுதியில் ஜனவரி 10ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 30 வயதான மனிதனின் காலில் சுட்டு தண்டனை அளித்ததாக கூறி உள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் டெல்லியில் இருந்து திரும்பி வந்த போது தனியாக இம்பால் விடுதியில் தங்கி இருந்தார்.

முந்தைய காலங்களிலும் அமைப்புகள் இது போல தங்கள் அதிகாரத்தை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய நகர்வு, மோசமான அடையாளமாக கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு அரம்பாய் தெங்கோல் என்ற அமைப்பானது கட்சி வித்தியாசம் பாராமல் மணிப்பூரை சேர்ந்த 37 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்களுக்கு சம்மன் அனுப்பியது.

2023ஆம் ஆண்டு மே மாதம் நடந்த வன்முறை நிகழ்வுக்குப் பிறகு இந்த அமைப்பு ஆயுதம் ஏந்திய தீவிர அமைப்பாக பார்க்கப்பட்டது. இந்துகளுக்கு ஆதரவாக அமைப்பை மீண்டும் மீட்டெடுக்கும் அமைப்பாக பார்க்கப்பட்டது. அவர்கள் மெய்தி குழுவுக்கு மத்தியில் பூர்வீக சனமாகி மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர். சக்தி வாய்ந்த அதிகாரிகளின் ஆதரவை அவர்கள் பெறுவதாகக் கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "இம்பாலின் காங்லாவில் மத்திய அரசு படைகள், மாநில அரசு படைகளின் முழு பாதுகாப்பில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அடங்கிய அனைத்துக்கட்சி கூட்டத்தின் போது மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.மேகாசந்திரா கொடூரமாக தாக்கப்பட்டதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறது,"என்று கூறியிருந்தார்.

அதிகாரப்பூர்வ நிலையின்றி அடிக்கடி கூட்டப்படும், சட்ட நடவடிக்கைகள், நீதியை புறம் தள்ளும் நீதிமன்றங்களை கங்காரு நீதிமன்றம் என்று அழைக்கப்படுகிறது.

அரசின் உரிமை பூஜ்யம்

முன்னாள் காங்கிரஸ்காரரான பைரன்சிங், பாஜகவில் சேர்ந்தார். 2017ஆம் ஆண்டு முதலமைச்சராக ஆனார். 2022ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவும், கூட்டணி கட்சியான நாகா அமைப்பின் என்பிஎஃப் கட்சியும் வெற்றி பெற்றன. மெய்தி மக்களும், மாநிலமும் வளர்ச்சி பெறுவதற்கான கட்டமைப்பின் கலைஞராக திகழ்ந்தார். வளர்ச்சி எனும் முன்னணியில் மாநில அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் இரட்டை இன்ஜின் அரசு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது என்ற கருத்தாக்கம் ஏற்பட்டது.

ஆனால், 2023 ஆம் ஆண்டின் வன்முறை எல்லாவற்றையும் மாற்றி விட்டது. மக்களவைத் தேர்தலின் போது கூட மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி புறக்கணித்தார். 2023ஆம் ஆண்டு மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பிரதமர் விலகி இருந்தார். குக்கீஸ் சமூகத்துடன் உடன் மிசோ சமூகத்தினரும் பிணைப்பை கொண்டவர்கள் என்றும், எனவே பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூடும் என்ற தகவலால் பிரதமர் விலகி இருந்தார்.

2024ஆம் ஆண்டு பாஜக, அதன் கூட்டணியில் இடம் பெற்ற என்டிஎஃப், என்டிபிபி, எம்பிபி ஆகியவை மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் முக்கியமான தொகுதிகளில் தோல்வியை தழுவினர். பைரன்சிங்கை மாற்ற வேண்டிய அவசியம் மோடிக்கு எழுந்திருக்கிறது. அதனால்தான் இப்போது அது நடந்திருக்கிறது. இப்போது ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் இருந்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூரசந்த்பூர் பகுதியை சேர்ந்த முன்னணி குக்கி சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசுகையில், "அதிகாரம், சக்தி என்ற நிலையில் முதலமைச்சர் பதவியில் இருந்து பைரன் சிங் வெளியேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது.. நிர்வாக ரீதியான தோல்விக்காக மக்கள் நீதிமன்றத்தையோ அல்லது சட்ட ரீதியிலான நீதிமன்றத்திலோ அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்," என்றார்.

  • 2017ஆம் ஆண்டு மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு பாஜக அரசு பதவி ஏற்றது. ஐந்து ஆண்டுகள் கழித்து 2022ஆம் ஆண்டு தமது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
  • 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி முன் எப்போதும் இல்லாத வகையில் வன்முறை தொடர்ந்தது. ஆங்காங்கே சிறிய அளவில் மோதல்கள் மூண்டன. எனினும் முதலமைச்சராக என்.பைரன் சிங் தொடர்ந்தார். மக்களவைத் தேர்தலின் போது இரட்டை இன்ஜின் அரசுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பேசினர். மக்களவைத் தேர்தலில் இன்னர் மணிப்பூர் தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது. அவுட்டர் மணிப்பூரில் பாஜக கூட்டணி கட்சியான என்டிஎஃப் கட்சியும், நாகலாந்து மக்களவைத் தொகுதியில் என்டிபிபி கட்சியும் தோல்வியைத் தழுவின.
  • தொடர்ச்சியான சமூக வலுவின்மை காரணமாக மணிப்பூரின் அடிப்படையான சமூக நூலிழை அறுபட்டது. உடல் ரீதியான மற்றும் மன ரீதியிலான பாதிப்புகள் அதிகரித்தன. பரஸ்பரம் நம்பிக்கையின்மைக்கான அளவீடு உச்சத்தைத் தொட்டது.
  • இம்பாலில் இருந்து அருகில் உள்ள சூரசந்த்பூர் பகுதிக்கு தனிப்பட்ட கார் அல்லது டாக்ஸியில் பயணிக்கும்போது ஜனவரி 18ஆம் தேதி கூடுதல் எச்சரிக்கையுடன் 6க்கும் அதிகமான சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

"நீங்கள் டெல்லி அல்லது பம்பாயில் இருந்து வரலாம். தேவையெனில் 10 முறை பரிசோதிக்கப்படுவீர்கள். நீங்கள் அல்லது தவிர உங்கள் மனைவி குக்கி அல்லது மொய்தி சமூகத்தை சேர்ந்தவரா என்று நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகின்றோம்," என ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறுகிறார். மணிப்பூரில் உள்ள அசாம் ரைபிள்ஸ், கர்வால்கள், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், மணிப்பூர் காவல்துறையினர் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனைகளில் ஈடுபடுகின்றனர்.

(நரேந்திர தேவ் டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் ஆவார். 2025ஆம் ஜனவரியில் மணிப்பூருக்கு சென்று வந்தார்)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.