ETV Bharat / sports

நானா பார்ம் அவுட்? ரஞ்சி கோப்பையில் என்ட்ரி தரும் ரோகித் ஷர்மா! விறுவிறுக்கும் பயிற்சி... முதல் போட்டி யாருடன்? - ROHIT SHARMA

ரோகித் சர்மா மும்பை ரஞ்சி கோப்பை அணியுடனான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அடுத்து வரும் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ரோகித் ஷர்மா (கோப்புப்படம்)
ரோகித் ஷர்மா (கோப்புப்படம்) (credit - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2025, 1:17 PM IST

Updated : Jan 14, 2025, 1:49 PM IST

ஹைதராபாத்: இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ரோகித் சர்மாவின் ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ரோகித் சர்மா அந்த டெஸ்ட் போட்டிகளில் 3,9,10,3,6 ரன்கள் மட்டுமே எடுத்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரோகித் பார்ம் அவுட் ஆகிவிட்டார் என்றே கிரிக்கெட் ரசிகர்கள் பலர் விமர்சிக்க தொடங்கினர்.

இதற்கு மத்தியில், ரோகித் ஷர்மா மும்பை ரஞ்சி கோப்பை அணியுடன் கைகோர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வான்கடே மைதானத்தில் இன்று (ஜன.14) நடைபெறவுள்ள ரஞ்சி கோப்பை பயிற்சியில் மும்பை அணியுடன் ரோகித் ஷர்மா இணைந்துள்ளார். மேலும், அதற்கான விருப்பத்தையும் அவர் ஏற்கனவே மும்பை அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

மும்பை ரஞ்சி கோப்பை அணி ஜம்மு காஷ்மீருக்கு எதிரான ஆட்டத்திற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், மும்பை அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ரோகித் ஷர்மா மும்பைக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடும் முடிவைப் பற்றி யோசித்து வருவதாகவும், ஜம்மு காஷ்மீருக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்பாரா இல்லையா என்பது இதுவரை முடிவாகவில்லை எனவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முடிவு செய்யப்படவில்லை

இதுகுறித்து மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க வட்டாரத்தில் கிடைத்த தகவலின்படி, ரோகித் ஷர்மா மும்பை ரஞ்சி கோப்பை அணியுடனான பயிற்சிக்கு வருவார். ஆனால், அடுத்து வரும் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சரியான நேரத்தில் அவர் தனது விருப்பத்தை தெரிவிப்பார் என கூறப்பட்டுள்ளது.

ரோகித் ஷர்மா கடைசியாக 2015 இல் மும்பை அணியுடன் உத்தரபிரதேசத்திற்கு எதிராக விளையாடினார். பார்டர் கவாஸ்கர் கோப்பையின் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதனால் ரோகித் ஷர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவாரா என்ற பேச்சுகளும் எழுந்தன.

கவுதம் கம்பீர் விருப்பம்

இதற்கிடையே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறினார். மேலும் அவர், எல்லோரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அந்த அளவுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் விரும்பும் வீரர்களை ஒருபோதும் பெற முடியாது'' என கவுதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jan 14, 2025, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.