கொல்கத்தா : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.14) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 28வது லீக் ஆட்டத்தில் லக்னோ - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 45 ரன்களும், கேப்டன் கே.எல் ராகுல் 39 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது. கொல்கத்தா அணியின் இன்னிங்சை பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தொடங்கினர். அதிரடி மன்னன் சுனில் நரேன் இந்த முறை 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அங்கிருஷ் ரகுவன்ஷியும் இந்த முறை பெரிய அளவில் சோபிக்கவில்லை. சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். மொஷின் கான் பந்துவீச்சில் ரகுவன்ஷி 7 ரன்கள் மட்டும் எடுத்து மார்கஸ் ஸ்டொய்னிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.