ஹைதராபாத்:இந்திய ஹாக்கி அணியின் தோனி என்று அழைக்கப்படும் ஸ்ரீஜேஷ், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இது குறித்து ஸ்ரீஜேஷ் கூறுகையில்,"தமிழ்நாடு ஹாக்கி யூனிட்டிற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோன். 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்தே என்னுடைய ஹாக்கி பயணம் தொடங்கியது. இப்போது பள்ளிகளில் கூட ஹாக்கி விளையாட்டு துவங்கி உள்ளது. இதன் மூலம் நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று உள்ளோம், அதனை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது" என தெரிவித்தார்.
2011-13 காலகட்டத்தில் தமிழ்நாடு அணிக்காக பல்வேறு ஹாக்கி போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த காலகட்டத்தில் ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீஜேஷ்க்கு தமிழ்நாடு அரசு பரிசுத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளது
கார்ட் ஆஃப் ஹானர்:பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. முன்னதாக ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (PR Sreejesh) ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதன்படி அவர், வெண்கலப் பதக்கம் வென்ற கையோடு ஓய்வு பெற்றார். பதக்கம் வென்றபோது மனமகிழ்ந்து மைதானத்திலேயே படுத்து அழுத ஸ்ரீஜேஷை, அணியின் சக வீரர்கள் கட்டியணைத்து ஊக்கப்படுத்தினர். மேலும் அவருக்கு கட் ஆஃப் ஹானர் (Guard Of Honour) மரியாதை அளித்து வழியனுப்பி வைத்தனர்.