ETV Bharat / state

"கிராமிய கலைஞர்களுக்கான ஒரு நாள் ஊதியம் ரூ.5,000 ஆக உயர்வு" - முதலமைச்சர் உத்தரவு! - MK STALIN

'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை, ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 3:06 PM IST

Updated : Jan 15, 2025, 3:25 PM IST

சென்னை: சென்னையில் கோலகலமாக நடந்த "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா" கலை நிகழ்ச்சிகள் சென்னையில் உள்ள 5 மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிலையில், 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கிராமியக் கலைஞர்கள் ஒரு நாள் ஊதியத்தை, ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கலை பண்பாட்டுத்துறை சார்பில், கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் இந்தாண்டிற்கான 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

சென்னையில் உள்ள 18 இடங்களில் ஜனவரி 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில், தற்போது 1,500 கிராமிய கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 2024-ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர், திருவள்ளுவர், பெரியார் விருதுகளை வழங்கினார் முதல்வர்..!

மேலும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திரு விழா’ கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் அதிக அளவில் கண்டுகளிக்கும் வண்ணம் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மின்னணு வீடியோ வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் - புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஜனவரி 13 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த நிகழ்ச்சியையும், ஜனவரி 14 கலை நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தற்போது, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் ஜனவரி 15 முதல் 17 வரை மூன்று நாட்கள் நடைபெறும் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் - புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திரு விழா" கலை நிகழ்ச்சிகளை, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் மேற்கண்ட இடங்களில் நேரடியாக கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Jan 15, 2025, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.