ETV Bharat / state

பெரிய சூரியூரில் முதல் ஜல்லிக்கட்டு; 775 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..! - TRICHY JALLIKATTU

திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி பெரிய சூரியூரில் தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டில் 775 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 3:31 PM IST

Updated : Jan 15, 2025, 4:37 PM IST

திருச்சி: திருச்சி சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பிரத்யேக திடல் அமைக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.15) காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுவாகும். இந்த போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 775 ஜல்லிக்கட்டு காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

முதலாவதாக ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இந்த போட்டியை வருவாய் கோட்டாட்சியர் அருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: "கிராமிய கலைஞர்களுக்கான ஒரு நாள் ஊதியம் ரூ.5 ஆயிரமாக உயர்வு" - முதலமைச்சர் உத்தரவு!

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, காளை உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், '' திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடல் கட்டப்பட உள்ளது. அதற்கான அரசாணை இன்று ஜல்லிக்கட்டு விழா மேடையில் விழா கமிட்டியினரிடம் கொடுக்கப்பட்டது.

அதில் ஒவ்வொரு ஆண்டும் தை 2ம் தேதி சூரியூர் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மற்ற நாட்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொள்ளும் வகையில் அமைக்கப்படும். மற்ற ஊர்களில் அவர்கள் பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு போட்டி நடத்திக் கொள்ளலாம். இங்கே நடத்த வேண்டும் என்ற நிர்பந்தம் விதிக்கப்பட மாட்டாது'' என குறிப்பிட்டார்.

Last Updated : Jan 15, 2025, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.