ETV Bharat / state

மாட்டுப் பொங்கல் சிறப்பு பூஜை! சூரியனை வணங்கி, கோமாதாவிற்கு வழிபாடு! - MATTU PONGAL CELEBRATION

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளுக்கு அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டு, வழிபாடு செய்தனர்.

மாட்டுப் பொங்கல் சிறப்பு வழிபாடு
மாட்டுப் பொங்கல் சிறப்பு வழிபாடு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 3:06 PM IST

தூத்துக்குடி/சேலம்: தமிழ்நாடு முழுவதும் தை மாதம் 2ஆம் நாளான இன்று (ஜன. 15) மாட்டுப் பொங்கல் தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடியில் அமைந்துள்ள நாட்டின பசுக்களை வளர்த்து, பராமரிக்கப்பட்டு வரும் சங்கர் கோசாலை கோமாதா சேவா டிரஸ்ட் சார்பில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.

இந்த கோசாலையில் காங்கேயம், தென்பாண்டி நாடு, கிர், ஓங்கல், காங்கிரிட்ஜ், புங்கனூர் குட்டை உள்ளிட்ட 12 வகையான சுமார் 70க்கும் மேற்பட்ட நாட்டின பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக நாட்டின பசுக்களை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் ஆகியவை பூசி புதிய வஸ்திரம் மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டன. பின் மாடுகளுக்குப் பிடித்த வாழைப்பழம், அகத்திக்கீரை, ஆகியவை படையல் வைக்கப்பட்டு கிருஷ்ணர், ஆண்டாள் சிலைகளுக்கு மாலை அணிவித்துப் பொங்கல் வைத்துச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதுகுறித்து சங்கர் கோசாலை கோமாதா சேவா டிரஸ்டில் பசுகளை வளர்த்து வரும் கனி கூறுகையில், “இந்த பொங்கலைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் நோய் நொடி இன்றி சிறப்பாக வாழ வேண்டும் எனப் பூஜைகள் செய்யப்பட்டன. வருங்கால சந்ததியினர் நாட்டுப் பசுக்களை வளர்ப்பதில் ஈடுபாடு காட்ட வேண்டும்” என்றார்.

பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: 2024-ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர், திருவள்ளுவர், பெரியார் விருதுகளை வழங்கினார் முதல்வர்..!

இதேபோல் சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரம் விநாயகம்பட்டி பகுதியில் விவசாயிகள் தங்களது குடும்பத்தினரோடு மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடினர். இதில் வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் கார்த்தி தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடினார். அப்போது, இந்த விழாவில் இந்த ஆண்டாவது விவசாயப் பொருளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய விலை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

முன்னதாக, மேளதாளம் முழங்கக் கால்நடைகளுக்குச் சீர்வரிசை கொண்டு வரப்பட்டு, அவைகளுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. பின்னர், அனைவரும் இயற்கையை வணங்கும் விதமாகச் சூரியனை வணங்கி பூஜை செய்தனர். பின் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த பசுக்களுக்கு உணவளித்து மகிழ்ந்தனர்.

இது குறித்துப் பேசிய வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் மு. கார்த்தி, “உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பொருட்களுக்கும் விலை நிர்ணயம் உண்டு. ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களுக்கு அந்த நிபந்தனை இல்லை. இதனால் காய்கறி விலை ஏற்றம், வீழ்ச்சி அடைவதால் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.