வதோதரா: விஜய் ஹசாரே தொடரில் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் (33) இதுவரை விளையாடிய ஆறு இன்னிங்ஸ்களில் 5 சதங்களை குவித்துள்ளார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது ஐந்தாவது சதத்தை பதிவு செய்துள்ள கருண் நாயர், விஜய் ஹசாரே தொடரின் ஒரே சீசனில் அதிக சதம் அடித்த தமிழக வீரர் என் ஜெகதீசனின் சாதனையை சமன் செய்துள்ளார். அந்த வகையில் கருண் நாயர் இந்த சீசனில் 112*, 44, 163*, 111*, 112 ,122* என அதிரடி ஆட்டமாடி ரன்களை குவித்துள்ளார்.
கருண் நாயர், 2016 இல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். இருப்பினும், அவர் இரு ODIகளில் மட்டுமே விளையாடி முறையே 7 மற்றும் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் 2016 ஆண்டு மொஹாலியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய கருண் நாயர் தனது திறமையை வெளிக்காட்ட அந்த வாய்ப்பை கட்சிதமாக பயன்படுத்திக்கொண்டார்.
ஆம், அந்த போட்டியில் கருண் நாயர் மூன்று சத்தங்களை விளாசினார். ஆனால், அவருக்கு அடுத்த டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் போனது கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. நட்சத்திர ஆட்டக்கார்களின் இருப்பு ஆகியவை கருண் நாயருக்கு வாய்ப்பில்லாமல் போனதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியா vs இங்கிலாந்து டி20 போட்டி.. டிக்கெட் விற்பனை துவக்கம்; முழு விவரம் இதோ!
தற்போது விஜய் ஹசாரே தொடரில் கேப்டனாக தனது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் மீண்டும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார் கருண் நாயர்.
🚨 Record Alert 🚨
— BCCI Domestic (@BCCIdomestic) January 12, 2025
Vidarbha captain Karun Nair has now hit the joint-most 💯s in a season in the #VijayHazareTrophy, equalling N Jagadeesan's (2022-23) tally of 5 centuries! 😮
📽️ Relive his fantastic knock of 122* vs Rajasthan in quarterfinal 🔥@IDFCFIRSTBank | @karun126 pic.twitter.com/AvLrUyBgKv
விஜய் ஹசாரே தொடரின் ஆறாவது இன்னிங்சில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கருண் நாயர் ஆட்டமிழக்காமல் 122 ரன்களை எடுத்து பிரமிக்க வைத்துள்ளார். கருண் நாயர் 82 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 122 ரன்களை எடுத்தார்.
இதுகுறித்து பிசிசிஐ தமது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், விதர்பா கேப்டன் கருண் நாயர் ராஜஸ்தானுடனான ஆட்டத்தில் என். ஜெகதீசனின் (2022-23) 5 சதங்களின் எண்ணிக்கையை சமன் செய்துள்ளார்'' என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது.