தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ind vs ire t20: உலகக் கோப்பை தொடரை வெற்றி கணக்குடன் துவங்குமா இந்தியா? அயர்லாந்துடன் இன்று மோதல்! - T20 World Cup 2024

T20 World Cup 2024 உலகக்கோப்பை தொடரில், இன்று நடைபெறும் தமது முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியுடன மோதுகிறது.

Indian team players Image
இந்திய அணி வீரர்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 11:09 AM IST

நியூயார்க்: உலகக் கோப்பை டி20 தொடரின் 8வது போட்டியில், இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி துவங்குகிறது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு இத்தொடரில் இது முதல் போட்டியாகும். இன்று போட்டி நடைபெறவுள்ள நியூயார்க் மைதானத்தில் இந்தியா அணி ஏற்கெனவே வங்கதேசத்துடன் பயிற்சி போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் என ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது.

ஹர்திக் பாண்டியா பயிற்சி போட்டியில் அதிரடியாக விளையாடி ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் அதிக விக்கெட்டுகள் எடுக்க வாய்ப்புள்ளது. இந்திய அணி பயிற்சி போட்டியில் இந்த மைதானத்தில் அதிக ரன்களை குவித்திருந்தாலும் பேட்ஸ்மேன்களுக்கு ஆடுகளம் சவாலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து அணியில் அநேக வீரர்கள் புதுமுகமாக இருந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டெர்லிங், ஜாஷ் லிட்டில் ஆகியோரது அனுபவம் அணிக்கு உதவும்.

டெஸ்ட் போட்டிகள் அந்தஸ்து பெற்றுள்ள அயர்லாந்து அணி கடந்த 2022 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை வென்று அதிர்ச்சி அளித்தது. ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் பெரிய அணிகளை வென்று அயர்லாந்து தனது திறமையை நிரூபித்து வருகிறது. எனவே இந்திய அணி இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு அயர்லாந்து டஃப் கொடுக்கும் என்றே அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணி கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் 4இல் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் அயர்லாந்து அணி 5 டி20 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரை வெற்றி கணக்குடன் துவக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க:மறக்க முடியாத 2007 டி20 உலகக் கோப்பை.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? - ஓர் அலசல்! - T20 World Cup 2024

ABOUT THE AUTHOR

...view details