நமது முன்னோர்கள், இயற்கையில் கிடைக்கும் தாவர வகைகளை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு பயன்படுத்தப்பட்ட தாவரங்களில் முருங்கையும் ஒன்று. பின்னர், முருங்கை கீரையின் நன்மைகளை தெரிந்து, அன்று தொட்டு இன்று வரை ஆயிர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கை கீரை, உடல் செயல்பாடுகளை மேம்படுத்தி ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. முருங்கை மோரிங்கா (Moringa) என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
முருங்கைக் கீரையில் உள்ள சத்துக்கள்:
- வைட்டமின் ஏ, சி, பி, ஈ
- கால்சியம்
- பொட்டாசியம்
- மெக்னீசியம்
- இரும்புச்சத்து
- புரதம்
- நார்ச்சத்து
- பொட்டாசியம்
- பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாக முருங்கைக்கீரை இருக்கிறது.
நன்மைகள்:
- முருங்கை இலைகளில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், குவெர்செடின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாப்பதிலும் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட மற்றும் கொடிய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் உதவியாக இருப்பதாக 2022ம் ஆண்டு வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
- கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க முருங்கை கீரை பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் இதய நோய் அபாயத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. முருங்கை இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. பைட்டோதெரபி ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இது மூட்டுவலி மற்றும் நீரிழிவு போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- முருங்கை இலைகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவதாக பல ஆய்வு கூறுகின்றது. மோரிங்காவின் உயிரியக்கக் கலவைகளான க்வெர்செடின் (Quercetin) மற்றும் குளோரோஜெனிக் அமிலம் (Chlorogenic acid) ஆகியவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் என தெரிவித்துள்ளது. மேலும், முருங்கைக்கீரையில் உள்ள பயோஆக்டிவ் β-சிட்டோஸ்டெரால் (bioactive β-sitosterol) கொலஸ்ட்ராலை குறைப்பதாக 2017ம் ஆண்டு NCBI நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
- ஃபுட் கெமிஸ்ட்ரி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அதன் நார்ச்சத்து மற்றும் உயிரியக்க கலவைகள் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மலச்சிக்கலைக் குறைக்கவும், வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், குடல் ஆரோக்கியத்தைப் பேணவும் முருங்கை இலைகள் நன்மை பயக்கும் என தெரியவந்துள்ளது.
- முருங்கை இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் கூடுதலாக அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இது தோல் சுருக்கங்களை நீக்கவும் காயங்களை ஆற்றவும் உதவுகிறது. முருங்கை இலைகள் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாப்பதற்கும் முருங்கை இலைகளைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், கல்லீரல் செல்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
- முருங்கை இலைகள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸின் சிறந்த மூலமாகும், இது எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவசியம். எவிடன்ஸ்-அடிப்படையிலான In complementary and alternative medicine நடத்தப்பட்ட ஆய்வில், முருங்கை கீரையை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைகளைத் தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகும் வாழைப்பூ..ஆய்வு சொல்வது என்ன?
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.