சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கும் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany) படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இத் திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் நடிக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரதீப்போடு கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும், பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் காதல் மற்றும் அறிவியல் புனைவு கலந்த கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திலிருந்து ஏற்கனவே தீமா (Dheema) என்ற பாடல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு நேற்று படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், இன்று சீமானும் பிரதீப் ரங்கநாதனும் இருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளது. சீமான் கட்சி ஆரம்பித்த பின் முழுநேரமாக சினிமாவில் பணியாற்றவில்லை. அவ்வப்போது கௌரவ தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளார்.
Our #LIK team is super happy to have you in our film @SeemanOfficial sir !!
— Seven Screen Studio (@7screenstudio) January 15, 2025
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! #LoveInsuranceKompany #LIK
@VigneshShivN @pradeeponelife @IamKrithiShetty@iam_SJSuryah @anirudhofficial@iYogiBabu @Gourayy @sathyaDP @PradeepERagav… pic.twitter.com/knH6Ai6xXF
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ((Love Insurance Kompany). இத்திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனின் அப்பா கதாபாத்திரத்தில் இயற்கை விவசாயியாக சீமான் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதையும் படிங்க: இன்றைய தலைமுறையின் காதல் கதை.. ’காதலிக்க நேரமில்லை’ விமர்சனம்
பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த அவரது முதல் படமான 'லவ் டுடே' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையொட்டி அவர் நடிக்கும் அடுத்த திரைப்படம் என்பதால் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. முன்னதாக இப்படத்திற்கு 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' (Love Insurance Corporation) என தலைப்பிடப்பட்டது.
ஆனால் LIC நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தலைப்பு உள்ளதாகவும், தலைப்பை மாற்றாவிட்டால் வழக்கு தொடருவோம் என படக்குழுவிற்கு எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் தலைப்பு 'love insurance kompany'என மாற்றப்பட்டுள்ளது.