ETV Bharat / entertainment

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் பேசும் ஜாக்கிசான்... ’கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ தமிழ் போஸ்டர் வெளியீடு! - KARATE KID LEGENDS TAMIL POSTER

Karate Kid Legends Tamil Poster: உலகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள ஜாக்கிசானின் ’த கராத்தே கிட்’ படத்தின் இரண்டாம் பாகமான 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' படத்தின் தமிழ் போஸ்டர் வெளியாகியுள்ளது

’கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ பட போஸ்டர்
’கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ பட போஸ்டர் (Credits: Sony Pictures India X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 19, 2025, 12:45 PM IST

சென்னை: நடிகர் ஜாக்கிசான் நடிப்பில் உருவாகியுள்ள ’கராத்தே கிட் லெஜண்ட்ஸ்’ (Karate Kid: Legends) படத்தின் தமிழ் போஸ்டர் நேற்று (பிப்.18) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு ஜாக்கிசான், ஜேடன் ஸ்மித் ஆகியோர் நடிப்பில் வெளியான ’த கராத்தே கிட்’ (The Karate Kid) படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்காப்பு கலைகளான கராத்தே, குங்ஃபூ போன்றவற்றை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் ஜாக்கிசான் போன்ற நடிகர்களின் படங்களில் இடம்பெறும் சண்டை காட்சிகளில் அந்த கலைகளுக்கான முக்கியத்துவம் இருக்கும். அந்த வகையில் ஜாக்கிசானே தற்காப்பு கலையை கற்று கொடுக்கும் ’த கராத்தே கிட்’ உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றது.

இந்த ’த கராத்தே கிட்’ திரைப்படமானது 1984ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தின் ரீமேக் தான். 1984ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான இத்திரைப்படத்தில் பாட் மொரிடா (Pat Morita) தற்காப்பு கலை பயிற்சியாளராகவும் , ரால்ஃப் மாகியோ (Ralph Macchio) சிறுவனாகவும் நடித்திருந்தார்கள். புதிதாக ஒரு ஊருக்கு குடி வரும் இளைஞரை அந்த ஊரைச் சேர்ந்த மற்ற இளைஞர்கள் அடித்து துன்புறுத்துகிறார்கள். இதை கவனிக்கும் பிளம்பர் ஒருவர் தன்னை தற்காத்துக் கொள்ள அவனுக்கு குங்ஃபூ பயிற்சி அளிக்கிறார்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கராத்தே கிட் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. 1989ஆம் ஆண்டு ’த கராத்தே கிட் பார்ட் 2’, 1994ஆம் ஆண்டு ’த நெக்ஸ்ட் கராத்தே கிட்’ என கராத்தே கிட் பட வரிசையில் மொத்தம் மூன்று படங்கள் வெளியாகின. அதன் பின் பல ஆண்டுகள் கழித்து இதன் முதல் பாகத்தைதான் 2010ஆம் ஆண்டு ஜாக்கி சான் மற்றும் ஜேடன் ஸ்மித் நடிப்பில் ரீமேக் செய்தனர்.

ஏற்கனவே தெரிந்த கதையாக இருந்தாலும் ஜாக்கிசான் மற்றும் ஜேடன் ஸ்மித் இருவரின் நடிப்பால் இந்த படம் சர்வதேச அளவில் வசூலை வாரி குவித்தது இப்படம். அப்போது தமிழிலும் வெளியாகியது. ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப் பின் ’த கராத்தே கிட்’ படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.

‘கராத்தே கிட் லெஜண்ட்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் 1984ஆம் வெளியான ஆரம்ப ’த கராத்தே கிட்’ திரைப்படத்தில் சிறுவனாக நடித்த ரால்ஃப் மாகியோ மற்றும் 2010 ஆம் ஆண்டு வெளியான படத்தில் நடித்த ஜாக்கி சான் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இப்படத்திலும் தற்காப்பு கலையை கற்றுக்கொள்வதுதான் கதைக்களம் என்றாலும் ஒரு இளைஞருக்கு இரு பயிற்சியாளர்கள் இணைந்து பயிற்சி அளிக்கிறார்கள் என சுவாரஸ்யமான மாற்றத்தை செய்துள்ளார்கள் படக்குழுவினர்.

இதையும் படிங்க: கடற்கரை மணலில் பிரம்மாண்டமாக வரையப்பட்ட சிவகார்த்திகேயன்... மணல் ஓவியம் மூலம் வாழ்த்திய ரசிகர்கள்

கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. வருகிற மே மாதம் 30 ஆம் தேதி ‘கராத்தே கிட் லெஜண்ட்ஸ்’ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படம் தமிழ் டப்பிங்கிலும் வெளியாகவுள்ளதை நேற்று தமிழ் போஸ்டர் மூலம் உறுதி செய்துள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் இத்திரைப்படம் வெளியாகிறது. விரைவில் தமிழ் டப்பிங் டிரெய்லர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.