டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீது விதித்திருந்த இடைக்கால தடையை நீக்கியது. இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகக் குறைவாக 55 ரன்களில் ஆல் அவுட்டானது.
மொத்தமாக உலகக் கோப்பையில் 2 போட்டிகளில் மட்டுமெ வெற்றி பெற்று வெளியேறியது. இதனால் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. இந்த மோசமான ஆட்டத்தை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கு தடை விதித்தது. இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த நவம்பர் மாதம் அதிரடியாக நீக்கியது. ஐசிசி விதிமுறைப்படி அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தனி அமைப்பாக சுதந்திரமாக செயல்பட வேண்டும்.