தமிழ்நாடு

tamil nadu

பெண்கள் குத்துச்சண்டை பிரிவில் விளையாடியது ஆணா? - ஒலிம்பிக்கில் வெடித்த பாலின சர்ச்சை! - paris olympics 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 12:19 PM IST

Olympic Games Paris 2024: பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை பயாலஜிக்கல் ஆண் என்று அறியப்படும் இமானே கெலிஃப்க்கு எதிரான போட்டியில் இத்தாலி வீராங்கனை 46 விநாடிகளிலேயே மூக்கு உடைக்கப்பட்ட நிலையில் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இமானே கெலிஃப்
இமானே கெலிஃப் (Credits - AP)

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் தொடர் ஜூலை 26 ஆம் ஆண்டு தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை 16வது சுற்று நடைபெற்றது. இதில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மற்றும் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இமானே கெலிஃப் ஆகியோர் மோதினர்.

இதற்கிடையே கடந்த 2023ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் போது இமானே கெலிஃப் ஒரு பயாலஜிக்கல் ஆண் என அறியப்பட்டதால் தனது பாலின தகுதியை நிரூபிக்கச் சோதனை நடத்தப்பட்டது. அச்சோதனையில் இமானே கெலிஃப் தோல்வியடைந்தார். இதன் காரணமாக அவரை உலக சாம்பியன்ஷிப் ஸ்போர்ட்ஸ் கமிட்டி தகுதிநீக்கம் செய்தது.

இருப்பினும் தற்போது நடந்துவரும் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் எந்த விதமான சோதனையும் செய்யாமல் பயாலஜிக்கல் ஆண் என்று அறியப்படும் இமானே கெலிஃப் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டது. இந்த விவகாரம் ஆரம்பம் முதலேயே சர்ச்சையைக் கிளப்பி வந்த நிலையில் நேற்று இந்த போட்டியானது நடைபெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கிரினி 46 நொடிகளிலேயே தனது மூக்கு உடைந்த நிலையில் போட்டியிலிருந்து வெளியேறினார். இதனையடுத்து இப்போட்டியில் கெலிஃப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இச்சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பேசும்பொருளாக மாறியுள்ளது. மேலும் எஞ்சலா கரினிக்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஏஞ்சலா கரினி, "தான் அப்போது தன்னுடைய மூக்குப் பகுதியில் கடுமையான வலியை அனுபவித்ததாகவும், இதுவரை இந்த மாதிரியான வலியை நான் அனுபவித்ததே இல்லை எனவும் கூறினார். இதன்காரணமாக இப்போட்டியைத் தொடர விரும்பவில்லை என்றும் இத்துடன் போதும் என்ற முடிவை எடுத்ததாகக் கூறினார். இதனால் போட்டியை முடிக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.

இமானே கெலிஃப்பின் பாலின தகுதி குறித்துப் பேசிய அவர், தான் இங்கு தீர்ப்பளிக்க வரவில்லை என்றும், ஒரு தடகள வீரர் இவ்வாறு இருப்பது சரி அல்லது தவறு என்பதைத் தான் முடிவு செய்ய இயலாது எனக் கூறினார். இருப்பினும் நான் ஒரு குத்துச்சண்டை வீரராக என் கடமையைச் செய்தேன் எனவும், என்னால் இந்த ஒலிம்பிக் தொடரில் கடைசி தருவாய் வரை செல்ல இயலாமல் உடைந்த இதயத்துடன் வெளியேறுகிறேன்" எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய பி.வி.சிந்து.. சீன வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி!

ABOUT THE AUTHOR

...view details