தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாரிஸ் ஒலிம்பிக் 2024; தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இளம் நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு தேர்வு! - Dhinidhi Desinghu

Dhinidhi Desinghu: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட 14 வயது நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 3:32 PM IST

நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு
நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு (credits - ANI)

சென்னை: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதில் 133 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் 320 போட்டிகளில் 32 பிரிவுகளில் விளையாட உள்ளனர்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 14 வயதான தினிதி தேசிங்கு தேர்வு பெற்றுள்ளார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் பெங்களூரில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த ஆண்டு நடைபெறக்கூடிய பாரிஸ் ஒலிப்பிக்கில் இந்தியா சார்பாக மொத்தம் 111 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ள நிலையில், வயது குறைந்த வீராங்கணையாக தினிதி பங்கேற்க உள்ளார்.

வேர்ல்ட் அக்வாட்டிக் புள்ளிப்பட்டியலில் 749 புள்ளிகளுடன் இந்தியாவின் முதல்நிலை வீராங்கனை என்ற அடிப்படையில் யுனிவர்சலிட்டி முறையில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இவர் இந்த ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஃபிரிஸ்டைல் பிரிவில் பங்கேற்க உள்ளார்.

இவர் நீச்சல் பயிற்சியை கடந்த 2018ஆம் ஆண்டு மேற்கொள்ள தொடங்கியுள்ளார். உலக நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் அளவில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை கைப்பற்றியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்றார். கோவாவில் நடைபெற்ற 37வது தேசிய விளையாட்டு போட்டியில் 7 தங்கப்பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், இந்த ஆண்டு தோஹாவில் நடைபெற்ற உலக நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்கேற்றார்.

இது குறித்து தினிதி கூறுகையில், "பொழுதுபோக்கில் என் வயது உடையவர்கள் அனுபவிக்கும் சிலவற்றை என்னால் அனுபவிக்க முடியாது எனவும், நண்பர்களுடன் வெளியில் அதிகமாக வெளியில் செல்ல மாட்டேன் எனவும் தெரிவித்தார்.

அப்போது தான் தன்னுடைய நீச்சல் பயிற்சியை ஆரம்பித்ததாக தெரிவித்தார். பின்னர், அதில் ஆர்வம் அதிகரித்து தீவிரமாக பயிற்சி செய்து தற்போது ஒலிம்பிக் வரை வந்துள்ளதாக தெரிவித்தார். இதற்காக தான் நிறைய தியாகம் செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த வாய்ப்பிற்காக கடுமையாக உழைத்தாகவும், இப்போது அதற்கான அங்கீகாரத்தை பெற்றதாகவும் அவர் கூறினார்.

சிறந்த தடகள வீரர்களைச் சந்தித்து அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பிற்காக ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். இது தனக்கு ஆரம்பம் தான் எனவும், வருகின்ற 2028 மற்றும் 2032ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கை எண்ணி உற்சாகம் அடைவதாக தெரிவித்தார். இந்த முறை எனது செயல்பாடு எப்படி இருந்தாலும் நான் என்ன கற்றுக்கொள்கிறேன் என்பது தான் என்னை சிறந்த தடகள வீராங்கனையாக உருவாக்கும்" என கூறினார்.

இதையும் படிங்க:உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details