ETV Bharat / state

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் - கொதிக்கும் அர்ஜுன் சம்பத் - ARJUN SAMPATH

புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

வேலூரில் அர்ஜுன் சம்பத் பேட்டி
வேலூரில் அர்ஜுன் சம்பத் பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2024, 8:30 PM IST

வேலூர்: விமான நிலையத்தில் நடிகர் விஜய், திரிஷாவை படம் எடுத்து வெளியிடுவது தான் உளவுத்துறையின் வேலையா எனவும் அர்ஜுன் சம்பத் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் மாவட்டம், பேரிபக்காளி தெருவில், இந்து மக்கள் கட்சியின் சார்பில், விஸ்வகர்மா சமுதாய கைவினை தொழில்கள், சலுகைகள் குறித்து கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு, மத்திய அரசு விஸ்வகர்மா மக்களுக்கு அளிக்கும் திட்டங்களை எடுத்து கூறினார்.

அதன் பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது; '' மத்திய அரசு அறிவித்த விஸ்வகர்மா கைவினைஞர்கள் திட்டத்தை மாநில அரசு தமிழகத்தில் செயல்படுத்தாமல் இருக்கிறது. ஆனால், அந்த பெயரை கலைஞர் கைவினைஞர்கள் திட்டம் என பெயர் மாற்றம் செய்கிறார்க்ள். எனவே திட்டத்தின் பெயரில் விஸ்வகர்மா இடம் பெற வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

பெண்ணின் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது

வரும் ஜனவரிம் 1ம் தேதி ஆகம விதிகளை மீறி நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களை திறந்து சிறப்பு வழிபாடு செய்ய கூடாது. பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மது விருந்துடன் கொண்டாடுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை குறித்து அதன் எப்.ஐ.ஆர் வெளியிட்ட காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை வெளியிட்டதால் அந்த பெண்ணின் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் (உதயநிதி) தான் கிறிஸ்தவர் என சொல்லிக்கொள்ளட்டும். சங்கிகள் வயிறு எரிவார்கள் என சொல்கிறார். ஆனால், துர்கா தான் (துர்கா ஸ்டாலின்) வயிறு எரிவார். என்னையும், பாஜக தலைவர் அண்ணாமலையையும் திமுக ஐடி விங்க் தரக்குறைவாக இணையதளங்களில் வெளியிடுகிறது.

ஆனால், கருத்து சுதந்திரம் கூட இல்லாமல், சமூக வலைத்தளங்களில் யாராவது வீடியோ வெளியிட்டால் உடனடியாக கைது செய்கின்றனர். இவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி. திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமியர்கள் ஆடு வெட்டுவோம் என்பதை ஏற்றுகொள்ள் முடியாது. அதனை முழுமையாக தடுக்க வேண்டும்.

உளவுத்துறையின் வேலையா?

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்ய கூடாது என அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

ஜனவரி 5 ஆம் தேதி மதுரையில் பிராமணர் பாதுகாப்பிற்காக சட்டம் இயற்ற சொல்லி உண்ணா விரதம் நடத்தயிருக்கிறோம். தமிழ்நாடு காவல்துறை பொய் வழக்கு போடுகிறது. இது தான் வேலையா? விமான நிலையத்தில் நடிகர் விஜய், திரிஷாவை படம் எடுத்து வெளியிடுவது தான் உளவுத்துறையின் வேலையா? ஜனநாயக முறைப்படி, இந்துக்கள் போராட்டம் நடத்தினால், அரசு அனுமதி வழங்குவது கிடையாது. ஆனால், மற்றவர்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள். பிராமணர்களை இழிவுபடுத்துவோரையும் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்'' என இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.