உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தின் டெராடூன் நகரில் நடைபெற்று வரும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் (National Games 2025), 10 மீட்டர் ஏர் ரைஃபிள் (10m Air Rifle) பிரிவில் பெங்களூருவைச் சேர்ந்த 15 வயது சிறுவனான ஜோனாதன் ஆண்டனி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவர் நடப்பு போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் மற்றும் பிரபல துப்பாக்கி சுடும் வீரர் சவுரப் சவுத்ரி ஆகியோரை வீழ்த்தி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இளம் துப்பாக்கி சுடும் வீரரான ஜோனாதன் ஆண்டனி 2022 ஆம் ஆண்டு நடந்த CBSE தெற்கு மண்டல ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அந்த போட்டியில் இருந்து அவரது துப்பாகி சுடும் போட்டியின் மீதான ஆர்வம் இன்று சர்வீசஸ் வீரர்களான ரவீந்தர் சிங் (வெள்ளி, 240.3) மற்றும் குர்பிரீத் சிங் (வெண்கலம், 220.1) ஆகியோரை வீழ்த்தி கர்நாடகாவிற்காக 240.7 புள்ளிகள் பெற்று கொடுத்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் இந்த போட்டியின் புள்ளிகள் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங்கின் சாதனைகளை ஜோனாதன் ஆண்டனி முறியடித்துள்ளார். மேலும் இதன் மூலம் அவர் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார்.
Finally us Jonathan's getting the recognition we deserve. Jonathan Antony, 15, beats Olympic bronze medallist Sarabjot Singh and Saurabh Choudhary to become youngest National Games champion in 10m air pistol. pic.twitter.com/Bzd5qWZVUs
— jonathan selvaraj (@jon_selvaraj) February 3, 2025
இந்த போட்டியின் ஆரம்பத்தில் ஜோனாதன், சவுத்ரி ஆகிய இருவரும் 8-வது இடத்தில் இருந்த நிலையில் இருவருக்கும் இடையே ஷூட்-ஆஃப் போட்டி நடத்தப்பட்டது. அதில் ஜோனாதன் 578 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தை தக்கவைத்து இறுதி போட்டிக்கு களமிறங்கினார். அப்போது, பட்டியலில் முதல் இடத்தில் ரவீந்தர் 584 மதிப்பெண்களுடனும், சரப்ஜோத் 583 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: தங்கம் வென்ற தமிழ்நாட்டு மங்கை நர்மதா!
இது குறித்து பேசிய ஜோனாதன் ஆண்டனி "இந்த வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திறமையான துப்பாக்கி சுடும் வீரர்களுடன் போட்டியிடுவது சந்தோஷத்தை தருகிறது. இந்த நாள் எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள். என்னையும், நாட்டையும் பெருமைப்படுத்த அயராமல் உழைப்பேன்” என்றார்.
மேலும், பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3-பொசிஷன்ஸ் போட்டியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிஃப்ட் கவுர் சாம்ரா ஒலிம்பிக் வீராங்கனை அஞ்சும் மௌத்கிலின் சாதனையை (458.7 புள்ளி) முறியடித்து, 461.2 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். தெலுங்கானாவின் சுரபி பரத்வாஜ் 488.8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.