ETV Bharat / lifestyle

நீளமான அடர்த்தியான கூந்தலுக்கு 'இந்த' எண்ணெய் தான் பெஸ்ட்..இப்படி காய்ச்சி பயன்படுத்துங்க! - ONION OIL FOR HAIR GROWTH

முடி உதிர்வு, பொடுகு தொல்லை என முடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் வெங்காய எண்ணெயை வீட்டிலேயே முறையாக எப்படி காய்ச்சுவது என தெரிந்து கொள்ளலாம்...

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Feb 4, 2025, 2:32 PM IST

வேலை அழுத்தம், காற்று மாசுபாடு, உணவுமுறை மாற்றங்கள் போன்ற பிரச்சனைகளால் இளம் வயதிலேயே பலர் பல்வேறு முடி பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றிலிருந்து விடுபட, மக்கள் சந்தையில் கிடைக்கும் பல்வேறு முடி பராமரிப்பு பொருட்கள் மற்றும் எண்ணெய்களை நாடுகிறார்கள். ஆனால், எத்தனை ஷாம்புகளை மாற்றினாலும், எந்த ஹேர் ஆயிலைப் பயன்படுத்தினாலும், சிலரது முடி உதிர்தல் நிற்கவே நிற்காது. அதில் நீங்களும் ஒருவரா? அப்படியானால், இயற்கையாக தயாரிக்கப்படும் இந்த வெங்காய எண்ணெயை வீட்டில் காய்ச்சி பயன்படுத்திப்பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • வெந்தயம் - 1 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 15

வெங்காயம் எண்ணெய் காய்ச்சும் முறை:

  • அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் இதில் வெந்தயம் மற்றும் இடித்து வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து கலந்து விடவும். அடுத்ததாக, கறிவேப்பிலையை சேர்த்து 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். இப்படி செய்வதால், வெங்காயம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் எண்ணெயில் படியும்.
  • எண்ணெய் கொதித்ததும் அடுப்பை அணைத்து, சூடு ஆறும் வரை தனியாக வைக்கவும். பின்னர், சுத்தமான துணியின் உதவியுடன் எண்ணெயை வடிகட்டி காற்று புகாத கண்ணாடி ஜாரில் அல்லது வாட்டர் கேனில் சேமித்து வைக்கலாம்.
கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

வெங்காயம் எண்ணெயின் நன்மைகள்:

  • இந்த எண்ணெய் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை இயற்கையான மாய்ஸ்சரைசராகச் செயல்பட்டு, முடிக்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இதில் உள்ள புரதங்கள் முடியை வலுப்படுத்துகிறது.
  • தேங்காய் எண்ணெய் காற்று மாசுபாட்டின் விளைவுகளிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது. மேலும், முடியின் வேர்களை வலுப்படுத்துகிறது மற்றும் முனைகள் பிளவுபடுவதைத் தடுக்கிறது.
  • வெந்தயத்தில் உள்ள புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் பொடுகு பிரச்சனையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கிறது.
  • இறுதியாக, வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக வெங்காயத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முடி பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை அனைத்தும் முடி உதிர்வைத் தடுத்து, முடி அடர்த்தியாகவும், வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வளர உதவுகிறது.
  • 2014ம் ஆண்டு 'சர்வதேச தோல் மருத்துவ இதழில்' வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, வெங்காய எண்ணெய் முடியின் வேர்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதாகக் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

முடி நீளமாக வளர இதுதான் பெஸ்ட்.. ட்ரை பண்ணி பாருங்க.! - Homemade hair tonic for hair growth

30 நாளில் முடி உதிர்வை தடுக்கும் கரிசலாங்கண்ணி எண்ணெய்..இப்படி தயாரித்து இவ்வாறு பயன்படுத்துங்கள்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.