சென்னை: பெரியார் குறித்து அவமரியாதையாக பேசுவதை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், சீமானை பற்றி பேச விரும்பவில்லை என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். செய்யாற்றில் இருக்கக் கூடிய தேசிய மாணவர் படை முகாமை ரூ.1 கோடி செலவில் மேம்படுத்த விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்து முடிந்த 76 ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பு பேரணியில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கமாண்டர் DDG S. ராகவ் மற்றும் இயக்குநர் வக்கீல் குமார் மற்றும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பாராட்டு (ETV Bharat Tamilnadu) "செய்யாறில் இருக்கக் கூடிய தேசிய மாணவர் படை முகாமை ஒரு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தேசிய மாணவர் பணியில் இருந்து தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை 14 லட்சம் ரூபாயிலிருந்து 28 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.டெல்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மாணவர்களுக்கு இந்த முறை விமானத்தில் அழைத்துச் செல்ல கோரிக்கை வைக்கப்பட்டது, அதன்படி தமிழ்நாடு அரசு சார்பாக 28 லட்சம் ரூபாய் செலவில் அனைத்து மாணவர்களையும் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக சென்று வந்தீர்களா? என மாணவர்களிடம் துணை முதலமைச்சர் கேட்டார். இதில் பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். உங்களுக்கு திமுகவும், திராவிட மாடல் அரசும், முதலமைச்சரும் என்றும் துணை நிற்பார்கள் என தெரிவித்தார். மேலும் தானும் டான் போஸ்கோ பள்ளியில் பயிலும் போது என்சிசி பிரிவில் சேர முயற்சித்தேன் எனவும் ஆனால் தான் தேர்வாக முடியவில்லை எனவும் அதன் பிறகு என்.எஸ்.எஸ் பிரிவில் சேர்ந்ததாக தெரிவித்தார். இப்போது உங்கள் முன் என்.சி.சி.நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார".பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: "டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தை சேர்ந்த தேசிய படை வீரர்கள் கலந்து கொள்ள கடந்த காலங்களில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் போது 3 நாட்கள் ஆகி விடுகிறது எனவும் அதனால் மிக சோர்வாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முறை 28 லட்சம் ரூபாய் செலவில் விமானம் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டனர்" என தெரிவித்தார்.மேலும் சென்னையில் பெரியார் சிலை அவமதிப்பு குறித்தான கேள்விக்கு "சைதாப்பேட்டையில் பெரியார் சிலை அவமதிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது" என தெரிவித்தார். பெரியார் குறித்து சீமான் பேசியது குறித்த கேள்விக்கு, "சீமானை பற்றி நான் பேச விரும்பவில்லை" என தெரிவித்தார்.