வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே குடிநீரும், கழிவுநீரும் ஒன்றாக வருவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்துள்ளது சீவூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் தலைவராக திமுகவை சேர்ந்த உமாபதி என்பவர் இருந்து வருகிறார். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு உறுப்பினராக ஸ்ரீவித்யா என்பவர் இருந்து வருகிறார். இந்தப் பகுதியில் சில மாதங்களுக்கு முன் கழிவு கால்வாய் அமைக்கும் போது அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம், கழிவுநீர் கால்வாய் கட்டும் இடத்தில் குடிநீர் குழாய் செல்வதாக தெரிவித்துள்ளனர். அப்போது சில மாதங்கள் கழித்து சாலை அமைக்கும் போது குடிநீர் குழாய் மாற்றி அமைத்து தருவதாக ஊராட்சி மன்றத் தலைவர் பொதுமக்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனால் கழிவுநீரும் குடி தண்ணீரும் ஒன்றாக கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் இருந்து வந்ததாக கூறி குடித்தண்ணீர் பைப்லைனை மாற்றி அமைக்க கூறி ஊராட்சி மன்ற தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியதால் அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டுள்ளனர் இதனால் ஊராட்சி மன்ற தலைவருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் சாலை அமைக்கும் மணிக்கு தடுத்து குடி தண்ணீர் குழாய் அமைத்து தர வேண்டுமென சாலையில் அமர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.