சென்னை: 2025 ஆம் ஆண்டு நடைபெறும் 97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வருகிற மார்ச் 2ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இயக்குநர் என பல்வேறு பிரிவுகளில் பல்வேறு படைப்புகளும் கலைஞர்களும் ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு பிரிவான லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவின் இறுதிப்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த குறும்படமான அனுஜா இடம்பெற்றுள்ளது. தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது இக்குறும்படம்.
ஆஸ்கரின் LIVE ACTION SHORT FILM பிரிவில் 180 குறும்படங்களுடன் போட்டியிட்டு இறுதி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது இந்திய குறும்படமான ’அனுஜா’. அந்த இறுதிப்பட்டியலில் ’A lien’, ’I'm Not a Robot’, ’The Last Ranger’, ’The Man Who Could not Remain Silent’ ஆகிய குறும்படங்களும் ’அனுஜா’ குறும்படத்துடன் போட்டியிடுகின்றன.
I know you'll be just as moved by Anuja as I was… I am and beyond thrilled to share that it's coming to Netflix on Feb 5!
— PRIYANKA (@priyankachopra) February 1, 2025
The film has been nominated for an Academy Award for Best Live Action Short Film.
Watching Sajda and Ananya bring this powerful tale to life is an… pic.twitter.com/Bo90JLb3oG
ஆடம் ஜெ கிரேவ்ஸ் (Adam J. Graves) இயக்கியுள்ள ’அனுஜா’ குறும்படமானது குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது. இக்குறும்படத்தின் தயாரிப்புக்குழுவில் உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, “உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளை பாதிக்கும் விஷயத்தை பேசியுள்ளது.
என்னைப் போலவே நீங்களும் நெகிழ்ச்சிக்குள்ளாவீர்கள். அனுஜா வெறும் படம் மட்டுமல்ல வாழ்க்கையின் அனுபவம். வாழ்க்கையின் இருண்ட பக்கங்களில் கூட நம்பிக்கையை வரவழைக்கும் சகோதரிகளின் அன்பை பேசும் படமாக இருக்கும். இது போன்ற ஒரு அற்புதமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் படத்துக்கு ஆதரவு கொடுப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.” என்று கூறியுள்ளார்.
மேலும் இக்குறும்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குனீத் மோங்கா ஏற்கனவே , தயாரித்த 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' (The Elephant Whisperers) மற்றும் 'பீரியட்: என்ட் ஆஃப் சென்டென்ஸ்' (Period. End of Sentence) ஆகிய இரண்டும் படைப்புகளுக்கு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.
‘அனுஜா’ குறும்படமும் ஆஸ்கர் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய எதிர்பார்ப்புகலை கொண்டிருக்கும் அனுஜா குறும்படம் பிப்ரவரி 5ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: சத்தமில்லாமல் கேம் சேஞ்சரை பின்னுக்கு தள்ளிய 'குடும்பஸ்தன்'... 11 நாட்கள் கடந்தும் வசூல் மழை
’அனுஜா’ குறும்படத்தின் டைட்டில் ரோலில் நடித்துள்ள சிறுமி சஜ்தா பதான் உண்மையிலேயே குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டவர். மேலும் இயக்குநர் மீரா நாயரின் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ’சலாம் பாம்பே’ திரைப்படத்தின் வருமானத்திலிருந்து நிறுவப்பட்ட சலாம் பாலக் அறக்கட்டளையானது, ஷைன் குளோபல் மற்றும் க்ருஷன் நாயக் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அனுஜா குறும்படத்தைை தயாரித்துள்ளது.