ETV Bharat / health

"புற்றுநோயை அறிவிக்கப்பட்ட நோயாக வகைப்படுத்த வேண்டும்" மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை! - CANCER

சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய நோயாக புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அப்போலோ மருத்துவர்கள்
அப்போலோ மருத்துவர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2025, 8:47 PM IST

சென்னை: புற்றுநோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அப்போலோ மருத்துவமனையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: புற்றுநோய் விழிப்புணர்வில் 'வண்ணமயமான ரிப்பன்கள்'..ஒவ்வொன்றும் குறிப்பது என்ன?

இதில், அப்போலோ புற்றுநோய் மையத்தின் முதுநிலை மருத்துவ நிபுணர் சங்கர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “புற்றுநோய் பாதிப்பை இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நோயாக வகைப்படுத்த வேண்டும். இதனால் நோய் பாதிப்பு எந்தப் பகுதியில் அதிகம் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப பரிசோதனையை அதிகப்படுத்த முடியும். மேலும் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சையை அளிக்க முடியும்.

இந்தியாவில் மரபணு மாற்றம் உள்ள புற்றுநோய் பாதிப்பு இருப்பதையும் தெரிந்துக் கொண்டுள்ளோம். மரபணு மாற்றம் உள்ள புற்றுநோயின் தன்மைக்கேற்ப அவர்களுக்கு மாத்திரைகளை மாற்றி அளிக்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் முதுநிலை மருத்துவ நிபுணர் பிரசாத் ஈஸ்வரன் கூறுகையில், “புற்றுநோய்க்கான மருந்துகளில் தற்போது அதிகளவில் முன்னேற்றம் வந்துள்ளது. இதனால் புற்றுநோயால் பாதித்தவர்கள் இறந்துவிடுவார்கள் என்ற நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆரம்ப நிலையில் கண்டுப்பிடித்தால் நோயினை முற்றிலும் குணப்படுத்த முடியும்” என்றார்.

தமிழ்நாடு மருத்துவ மற்றும் குழந்தை நல புற்றுநோயியல் மருத்துவ சங்கத்தின் (TAMPOS) தலைவர் கலைச்செல்வி கூறுகையில், "வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறைகளில் மாற்றம், உடல் பருமன் போன்றவற்றாலும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இளம் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் வளர்ச்சியால், 30 வயதில் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு வருவதற்கும் வாய்ப்புள்ளது. இவற்றை தடுப்பதற்கு புற்றுநோயை அறிவிக்கப்பட்ட நோயாக வகைப்படுத்த வேண்டும்." என்றார்.

இதையும் படிங்க: புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி? கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!

தமிழ்நாடு அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கத்தின் (TASO) செயலாளர் ஐயப்பன் கூறும்போது, “ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிவதும், சிகிச்சை பெறுவதும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதுடன், சிகிச்சைக்கான செலவையும் குறைக்கும். விரிவான விழிப்புணர்வை பரப்புவதன் மூலம் இதற்கான சிகிச்சை அனைவருக்கும் கிடைப்பதை இது உறுதிசெய்யும்.

ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர், ராஜஸ்தான் ஆகிய 15 மாநிலங்கள் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை ஏற்கனவே அறிவித்திருக்கின்ற நிலையில், தேசிய அளவில் இதனை அமல்படுத்துவது அவசியமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவதாக அறியப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையானது, 15.7 லட்சமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2022-ம் ஆண்டில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு, அறிவிக்கத்தக்க நோயாக புற்றுநோயை வகைப்படுத்தலாம் என்ற பரிந்துரையுடன் ஒரு அறிக்கையை மாநிலங்களவைக்கு சமர்ப்பித்துள்ளது.

இந்த முன்னெடுப்பின் வழியாக, நடைபெறும் பட்ஜெட் தொடரின்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் இதனை மசோதாவை நிறைவேற்றுவது இந்திய அரசின் அடுத்த சரியான நடவடிக்கையாக இருக்கும் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.