புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் கடந்த மாதம் 31 ஆம் தேதி துவங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி 2025- 26 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினர்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது உரையாற்றி வருகிறார். அவரது உரையின் சாரம்சங்கள்:
"குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தொிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளிக்கும் வாய்ப்பை 14 ஆவது முறையாக பெற்றுள்ளேன். இந்த வாய்ப்பை எனக்கு அளி்த்துள்ள நாட்டு மக்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நாம் தற்போது 2025 ஆம் ஆண்டில் உள்ளோம். அதாவது 21 ஆம் நூற்றாண்டின் 25 சதவீதம் உருண்டோடிவிட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 20 ஆம் நூற்றாண்டிலும், 21 ஆம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளிலும் நாட்டில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் என்ன என்பதை காலம்தான் உணர்த்தும். ஆனால், குடியரசுத் தலைவரின் உரையை சில நிமிடங்கள் வாசித்தாலே இந்த ஆட்சியிலும் நிகழ்த்தப்பட்டு வரும் சாதனைகள் தெள்ளத்தெளிவாக தெரியும்.
#WATCH | In a jibe to Lok Sabha LoP Rahul Gandhi, PM Narendra Modi says, " ...those who have photo sessions in the huts of the poor, for their own entertainment, will find the mention of the poor in parliament boring." pic.twitter.com/YuB0TsqRos
— ANI (@ANI) February 4, 2025
நாங்கள் ஏழைகளுக்கு இதுவரை நான்கு கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். இதுபோன்று நாடு முழுவதும் 12 கோடி கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. வீடின்றி தவிக்கும் ஏழைகளின் வலியையும், கழிப்பறை வசதியில்லாமல் சிரமப்படும் ஏழைப் பெண்களின் வேதனையையும் எங்களால் தான் உணர முடியும். ஏழைகளின் கூரை வீட்டுக்கு சென்று, தங்களின் பொழுதுபோக்கிற்காக அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தில் அவர்களை பற்றி பேசுவது சலிப்பை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது." என்று ராகுல் காந்தியை மோடி மறைமுகமாக விமர்சித்து பேசினார்.
#WATCH | PM Narendra Modi says, " when the fever is high, people utter anything. but they also utter things when they are highly dejected...those who were not born in india - 10 crore such frauds were reaping benefits of government funds through various schemes...we removed names… pic.twitter.com/wk3cx4AZYf
— ANI (@ANI) February 4, 2025
மேலும் பேசிய அவர், "காய்ச்சலிலும், மனஉளைச்சலிலும் உள்ளவர்கள் எதையாவது உளறிக்கொண்டே இருப்பார்கள். இந்தியாவில் பிறக்காத இத்தகைய 10 கோடி மோசடி பேர்வழிகள், அரசின் பல்வேறு திட்டங்களில் பெயரில் அரசாங்கத்தின் நிதியில் பயனடைந்து கொண்டிருந்தனர். அத்தகைய 10 கோடி பேரை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்கியதுடன், அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைய வழிவகைகளை நாங்கள் செய்துள்ளோம்.
முன்பெல்லாம், ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த செய்திகள் தான் நாளிதழ்களின் தலைப்பு செய்திகளாக இடம்பிடிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக, பல்லாயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு, அவை தேசத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.