ETV Bharat / spiritual

மாசி மகா சிவராத்திரி: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம்! - THENI MAHA SHIVARATRI

பெரியகுளத்தில் உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று கொடியேற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம்
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2025, 2:51 PM IST

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மிக சிறப்பான முறையில் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை 8 நாட்கள் மாசி மகா சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ளது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த கோயிலை குலதெய்வமாக வழிபடுவது ஐதீகம்.

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: தத்ரூபமான நாராயணி தேவி அம்மன்! விளக்குப் பூஜையில் வெளிநாட்டு பெண்கள்!

இந்நிலையில் இந்த வருடம் மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்காக பரம்பரை காவல்காரர்களால் கொண்டு வரப்பட்ட 80 அடி உயரமுள்ள மூங்கில் மரத்தில் மஞ்சல் நிற கொடி கட்டப்பட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின் மூங்கில் கொடிமரம் ஊண்டப்பட்டு கொடியேற்றும் வைபவம் இன்று சிறப்பாக நடைபெற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்து மகிழ்ந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.