ஐபோனில் ஒரு ஆபாச செயலி அறிமுகமாகியிருப்பது ஆப்பிள் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய டிஜிட்டல் கொள்கையே இதற்குக் காரணம் என்றும், இதன் மூலம் நுகர்வோர் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது என்றும் ஆப்பிள் குற்றஞ்சாட்டியுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், பாதுகாப்புக் கவலைகள் எழுந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரின் மீது கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது. எந்தெந்த செயலிகள் பயனர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்து வந்தனர். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டம் (DMA) காரணமாக, ஆப்பிளின் அதிகாரம் குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களை அனுமதிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆபாச செயலி
ஆப்பிள் ஆப் ஸ்டோர் 2008-ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருவது. இந்த மாற்றத்தின் விளைவாக, ஆல்ட் ஸ்டோர் (AltStore) என்ற மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர் (Third Party App Store) வாயிலாக "ஹாட் டப்" (Hot Tub) என்ற ஆபாச செயலி ஐபோன் பயனர்களுக்குக் கிடைக்கிறது. இந்த செயலி, "பெரியவர்களுக்கான உள்ளடக்கத்தை ரகசியமாகவும், பாதுகாப்பாகவும், நேர்த்தியாகவும் பார்வையிடுவதற்கான வழி" என்று தன்னை விவரித்து கொண்டுள்ளது.
Apple responds after being forced to allow iPhone porn app:
" we are deeply concerned about the safety risks that hardcore porn apps of this type create for eu users, especially kids. [...] we certainly do not approve of this app and would never offer it in our app store"<="" p>— 9to5mac (@9to5mac) February 3, 2025
ஆப்பிள் அல்லாத பிற ஆப் ஸ்டோர்களில் உள்ள செயலிகள், ஆப்பிள் நிறுவனத்தால் ஆரம்பகட்ட தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. சைபர் பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே இதில் சரிபார்க்கப்படுகின்றன. செயலியின் உள்ளடக்கம் குறித்து எந்த மதிப்பீடும் செய்யப்படுவதில்லை. இந்த நேரத்தில் ஆல்ட்ஸ்டோர் நிறுவனம், ஹாட் டப் செயலியை "உலகின் முதல் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட ஆபாச செயலி" என்று விளம்பரப்படுத்தியது.
இந்த விளம்பரம் ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுப்பதற்கான எந்த கதவுகளும் ஆப்பிள் வசம் இல்லை. ஏனென்றால், தடுப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சட்டங்கள் அடித்து தவிடுபொடியாக்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபோனில் இருந்து ஆபாசத்தை தள்ளி வைப்பது தங்களில் தார்மீகப் பொறுப்பு என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
வருத்தத்தில் ஆப்பிள்
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஆப்பிள் நிறுவனம், தாங்கள் இந்த ஆபாச செயலிக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும், சட்டரீதியான காரணங்களுக்காகவே அதை அனுமதிக்க வேண்டியதாயிற்று என்றும் தெரிவித்துள்ளது. ஆபாச உள்ளடக்கத்தை தங்கள் தளத்தில் வெளியிடுவதற்கு ஆப்பிள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
iPhone turns 18 this year, which means it’s finally old enough for some more ~mature~ apps…
— AltStore.io (@altstoreio) February 3, 2025
Introducing Hot Tub by @C1d3rDev, the world’s 1st Apple-approved porn app!
Try it now on AltStore PAL — just in time for the season of love ❤️
Source: https://t.co/81ja9rSpCR pic.twitter.com/VW37rb6K5h
இத்தகைய ஆபாச செயலிகள் ஐரோப்பிய ஒன்றிய பயனர்கள், குறிப்பாக குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்குகின்றன; இந்த செயலியும், இது போன்ற மற்றவைகளும் நுகர்வோர் நம்பிக்கையைக் குலைக்கும்; நாங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பாடுபட்டு உருவாக்கிய சிறந்த சூழல் அமைப்பில் நம்பிக்கை குறையும் என்று ஆப்பிள் தனது அறிக்கையில் வருந்தி எழுதியுள்ளது.
நேர்மையற்ற ஆப்பிள்
உண்மை என்னவென்றால், ஆல்ட் ஸ்டோருக்கு பக்கபலாம் எபிக் கேம்ஸ் (Epic Games) நிறுவனம் செயல்பட்டு வருகிறது என ஆப்பிள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டது. இதற்கு எபிக் கேம்ஸ் நிறுவன தலைமை செயல் அலுவலர் டிம் ஸ்வீனி ஆப்பிள் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Apple is being extremely disingenuous in attacking the European Union here. The iOS App Store hosts the Reddit app, which provides access to massive amounts of porn. Apple knows this, permits it, and gave Reddit a 17+ (!!!) rating and Editors Choice award. https://t.co/voZOzK4Xx7
— Tim Sweeney (@TimSweeneyEpic) February 4, 2025
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (முன்னாள் டிவிட்டர்) பதிவில், "ஆப்பிள் ஐரோப்பிய ஒன்றியம் மீது பழி சுமத்துவது நேர்மையற்ற முறையாகும். ஆப்பிள் ஐஓஎஸ் (iOS) ஆப் ஸ்டோரில் ரெடிட் செயலி உள்ளது. அதில் ஏராளமான ஆபாச உள்ளடக்கத்திற்கான அணுகல் உள்ளது. ஆப்பிள் இதை அறிந்தும், ரெடிட்டுக்கு 17+ மதிப்பீட்டை வழங்கியுள்ளது," என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சாட்ஜிபிடி, டீப்சீக்-க்கு போட்டியாளர் ரெடி; 6 மாதங்களில் தயாராகிறது இந்திய ஏஐ மாடல்! |
மேலும், "எபிக் கேம்ஸ் ஸ்டோரில் எந்த ஆபாச செயலியும் இல்லை என்பதை நாங்கள் உறுதியாகக் கூறமுடியும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார். டெக் துறையில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இவ்விவகாரத்தை நீதிமன்றங்கள் மட்டுமே சரியாக கையாள முடியும் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.