சென்னை: நடிகர் சிலம்பரசன் தனது பிறந்தநாளன்று அவர் நடிக்கும் அடுத்தடுத்த மூன்று படங்களின் அப்டேட் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளான நேற்று (பிப்.03) மாலை அவரது 51வது படத்தின் போஸ்டரையும் தலைப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த படத்திற்கு ’காட் ஆஃப் லவ்’ (‘God of Love’) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரில் சிம்பு மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர். அவரது நடிப்பில் கடைசியாக 2023ஆம் ஆண்டு ’பத்து தல’ திரைப்படம் வெளியானது. அதன்பின் 2024ஆம் ஆண்டு முழுவதும் எந்த படமும் வெளியாகவில்லை.
அவரது ரசிகர்களின் நீண்ட காத்திருப்பை போக்கும் விதமாக தனது பிறந்தநாளன்று அடுத்தடுத்து தான் நடிக்கும் மூன்று படங்களைப் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என முன்பே தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அவரது பிறந்தநாள் ஆரம்பித்த பிப்ரவரி 3ஆம் தேதி நள்ளிரவு 12 மணியிலிருந்தே அப்டேட்கள் கொட்ட தொடங்கின.
The journey of brilliance continues!
— Raaj Kamal Films International (@RKFI) February 3, 2025
Birthday wishes, @SilambarasanTR_
#HappybirthdaySTR#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film@ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @trishtrashers @AshokSelvan @AishuL_ @C_I_N_E_M_A_A… pic.twitter.com/TbxRVrqU9Q
சிலம்பரசன் நடிக்கும் 49வது படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இட்லி கடை’, ’பராசக்தி’ திரைப்படங்களில் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த அறிவிப்பு போஸ்டரில் பொறியியல் படிப்பின் புத்தகத்தை கையில் வைத்திருக்கிறார். மேலும் The Most Wanted Student எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒருவேளை சிம்பு இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராகவோ அல்லது மாணவனாகவோ நடிக்கலாம்.
நீண்ட நாட்களாக அறிவிப்பில் இருக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகும் படமானது, சிம்புவின் 50வது படமாக தயாராகிறது. இந்த படத்தைப் பற்றி நீண்ட நாட்களாக எந்த அறிவிப்பும் வராமல் இருந்ததற்கு காரணம், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பு பணியிலிருந்து விலகியதுதான் என தகவல்கள் வந்தன. அதனை உறுதி செய்யும் விதமாக இந்தப் படத்தின் தயாரிப்பாளராக சிம்புவே களமிறங்குகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா - சிம்பு கூட்டணி இந்தப் படத்தில் இணைகிறது.
காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை…
— Silambarasan TR (@SilambarasanTR_) February 3, 2025
மீறி அவன் பூமி வந்தால்…?❤️🔥🔥#vintagestrmood#STR51 #AGS27
@Dir_Ashwath @archanakalpathi @aishkalpathi @Ags_production @venkat_manickam @malinavin @onlynikil @prosathish #KalpathiSAghoram #KalpathiSGanesh… pic.twitter.com/mnZuqYONsp
இதற்கிடையில் சிம்புவின் நடிப்பில் 48வது படமாக மணிரத்னத்தின் ’தக் லைஃப்’ உருவாகிறது. இதில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கிறார் சிலம்பரசன். ’தக் லைஃப்’ படக்குழுவின் சார்பில் நேற்று சிம்புவின்பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கென பிரத்யேகமாக பட உருவாக்க டீசர் (Making Teaser) ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதனையும் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து சிம்புவின் 51வது படத்தை ’ஓ மை கடவுளே’ பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார் என்ற தகவல் முன்பே அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில் அந்த படத்திற்கு ’காட் ஆஃப் லவ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஃபேண்டஸி திரைப்படமாக இந்த படம் இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பதிவிட்டுள்ளார். படத்தின் போஸ்டரிலும் சிம்புதான் ‘God of Love’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சந்திரிகா டாண்டன் கிராமி விருது வென்று சாதனை!
.@Dir_Ashwath :
— KARTHIK DP (@dp_karthik) February 3, 2025
" காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை…
மீறி அவன் பூமி வந்தால்" 👏🏻🔥
these lyrics from #AjithKumar's #Dheena were used in the announcement birthday poster of #STR51 today.pic.twitter.com/XrdxZK2FPQ
ஒருவேளை சிம்பு இப்படத்தில் கடவுளாக நடிக்கிறாரா? என கேள்வி எழாமல் இல்லை. அதனை உறுதி செய்யும்விதமாக படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர் அப்பதிவில் ”காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை… மீறி அவன் பூமி வந்தால்…?” என்ற கேப்சனை பயன்படுத்தியுள்ளனர். இந்த வரிகள் அஜித்குமாரின் ’தீனா’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகள் என இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் ’ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்திருப்பார். அந்த திரைப்படமும் ஃபேண்டஸி கதையம்சம் உள்ள திரைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.