ETV Bharat / sports

வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி...சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றி! - CHENNAI ADVOCATES TEAM WON

சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றி பெற்று 2024ம் ஆண்டுக்கான கோப்பையை கைபற்றியது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2024, 9:02 PM IST

சென்னை: வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றி பெற்று 2024ம் ஆண்டுக்கான கோப்பையை கைபற்றியது.

வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி கடந்த 1998ம் ஆண்டு முதல் துவங்கி 27 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான போட்டி சென்னையில் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி ரவிக்குமார் உஜ்ஜல் புயான், ஆர்.மகாதேவன் ஆகியோருடன் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தரும் விழாவினை துவக்கி வைத்தனர்.

அகில இந்திய கிரிக்கெட் போட்டியில் அலகாபாத், ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, கேரளா, மெட்ராஸ், ஒடிசா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை சென்னை வழக்கறிஞர்கள் கிரிக்கெட் சங்க தலைவர் எம். வேல்முருகன் மற்றும் செயலாளர் ஆர். முரளி ஆகியோர் மேற்கொண்டனர்.

கிரிக்கெட் போட்டிகள் சென்னை ஐஐடி விளையாட்டு மைதானம், ஏ.எம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானம், பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (டிச 26) நடைபெற்றது. இறுதி போட்டி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணிக்கும், அலகாபாத் உயர்நீதிமன்ற அணிக்கும் நடைபெற்றது. 20 ஓவர்கள் கொண்ட போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, வெற்றி பெற்ற அணிக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் பரிசு கோப்பையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதன்மை அதிகாரி காசிவிஸ்வநாதன், தொழிலதிபர் ஜெயமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.