Varalaxmi Sarathkumar: பிரபல நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுடன் மார்ச் 1ஆம் தேதி மும்பையில் குடும்பத்தினர் மத்தியில், எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரலட்சுமி சரத்குமார், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'போடா போடி' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துப் பிரபலமாகியுள்ளார்.