ETV Bharat / photos

'வேட்டையன்' பட இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் - vettaiyan audio launch gallery - VETTAIYAN AUDIO LAUNCH GALLERY

இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'வேட்டையன்'. லைகா புரோடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (செப் 21) நடைபெற்றது. மேலும் வேட்டையன் படத்தின் டீசரும் நேற்று வெளியானது. மேலும் இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டக்குபத்தி, ஃபகத் ஃபாசில். துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேட்டையன் திரைப்படம் போலீஸ் என்கவுண்டர் தொடர்பான கதை என தெரிகிறது. முன்னதாக இப்படத்திலிருந்து வெளியான மனசிலாயோ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து வெளியான ‘hunter varaar’ பாடல் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுகும் பாடல் போன்று நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வேட்டையன் படத்தின் டீசரும் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. வேட்டையன் திரைப்படம் வரும் ஆயுத பூஜை விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (செப்.20) நடைபெற்றது. மேலும், வேட்டையன் படத்தின் டீசரும் நேற்று வெளியானது. மேலும் இப்படத்தில் அமிதாப் பச்சன், நடிகை அபிராமி, மஞ்சு வாரியர், ராணா டக்குபத்தி, ஃபகத் ஃபாசில். துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 5:09 PM IST

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.