ETV Bharat / entertainment

"ராம் சரணுக்கு தேசிய விருது கிடைக்கும்"... 'கேம் சேஞ்சர்' படம் பார்த்த புஷ்பா 2 இயக்குநர் பாராட்டு! - SUKUMAR ABOUT GAME CHANGER MOVIE

Director sukumar praises Ram charan: ’கேம் சேஞ்சர்’ படத்திற்காக நடிகர் ராம் சரணுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என ’புஷ்பா 2’ பட இயக்குநர் சுகுமார் பாராட்டியுள்ளார்.

கேம் சேஞ்சர் படத்திற்காக ராம் சரணுக்கு இயக்குநர் சுகுமார் பாராட்டு
கேம் சேஞ்சர் படத்திற்காக ராம் சரணுக்கு இயக்குநர் சுகுமார் பாராட்டு (Credits - Film Poster, ANI)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 23, 2024, 1:32 PM IST

ஹைதராபாத்: கேம் சேஞ்சர் படத்திற்காக ராம் சரணுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என இயக்குநர் சுகுமார் தெரிவித்துள்ளார். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’ (Game changer). தமன் இசையமைத்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.

தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் பாடல்கள் ரா மச்சா மச்சா, DHOP ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி அமெரிக்கா நாட்டில் உள்ள டெல்லாஸ் மாகாணத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இயக்குநர் சுகுமார், புச்சி பாபு ஆகியோரும் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து கேம் சேஞ்சர் படம் பார்த்த இயக்குநர் சுகுமார் பேசுகையில், “ரங்கஸ்தளம் படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என நினைத்தேன், ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது ’கேம் சேஞ்சர்’ திரைப்படம் பார்த்த பிறகு, இப்படத்திற்காக அவர் கண்டிப்பாக தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

மேலும் பேசுகையில், “கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாதி சூப்பராக உள்ளது. இடைவெளி மற்றும் இரண்டாம் பாதியின் பிளாஷ்பேக் காட்சிகள் வேற லெவலில் உள்ளது. இப்படத்தின் பிளாஷ்பேக் ஜென்டில்மேன் மற்றும் இந்தியன் படம் போல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என கூறியுள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள ’புஷ்பா 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு பேசுகையில், “நான் சிறுவயது முதல் இயக்குநர் ஷங்கரின் படங்களை பார்த்து வளர்ந்தவன், அதிலும் குறிப்பாக இந்தியன் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். கேம் சேஞ்சர் படத்தில் ஒரு சில காட்சிகளை பார்த்தேன். நன்றாக வந்துள்ளது” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 2024இல் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்; சூப்பர்ஸ்டாரை பின்னுக்கு தள்ளிய விஜய், சிவகார்த்திகேயன்! - TOP 10 TAMIL HIGH COLLECTIONS 2024

இயக்குநர் புச்சி பாபு அடுத்ததாக ராம் சரண் படத்தை இயக்கவுள்ளார். ஜான்வி கபூர் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். ஷங்கர் இயக்கியுள்ள ’கேம் சேஞ்சர்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.