உடல் எடையை குறைப்பதற்காக, வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை பழ சாறு கலந்து குடிக்கும் பழக்கத்தை பலரும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், தேன் கலந்த எலுமிச்சை பழ சாறு குடிப்பதால் கிடைக்கும் மற்ற நன்மைகள் என்னென்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..
- தேனில் இரும்பு, கால்சியம், சோடியம், பாஸ்பரஸ், சல்பர், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி போன்ற வைட்டமின் சத்துக்கள் உள்ளது. அதே போல, எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி, பிளாவனாய்டுகள், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன.
- உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், வெறும் வயிற்றில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை குடித்து வர, உடல் எடையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என NCBI நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தண்ணீர் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இருப்பினும், இது எல்லோருக்கும் பொருந்தாது என்பதால் மருத்துவர் ஆலோசனையுடன் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
- ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் அரை எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் மலச்சிக்கல் மற்றும் நெஞ்சு எரிச்சல் பிரச்சனை குறையும். மேலும், தலைவலி போன்ற பிரச்சனைகளை தேன் குணப்படுத்துவதாக கூறப்படுகிறது.
- தேனுடன் ரோஸ் வாட்டரை ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொள்வதன் மூலம், அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும். ரோஸ் வாட்டர் சருமத்தின் pH அளவை சமன் செய்து, அதை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன் சர்க்கரை சேர்த்து முகத்தில் மென்மையாகத் தடவி வந்தால் இறந்த செல்கள் நீங்கி சருமம் பளபளப்பாகும்.
- ஒரு கப் ஹெர்பல் டீயில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், உடலில் தேங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியெற்றும். மேலும், இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகருடன் ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சைனஸ் பிரச்சனை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
- உடலை நீரேற்றமாக வைத்திருக்க இது உதவுகிறது. தேனுடன் எலுமிச்சை கலந்த தண்ணீரை எடுத்துக்கொள்வதால், நாள் முழுவதும் உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், தேன் மற்றும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.