வீட்டின் சோபாவில் ஹாய்யாக படுத்திருந்த சாரைப் பாம்பு! - SNAKE ENTERS HOUSE
🎬 Watch Now: Feature Video


Published : Feb 22, 2025, 2:55 PM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள், மான்கள், சிறுத்தை, காட்டுப்பன்றி என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். அதிலும் மலைப் பகுதி என்பதால், குறிப்பிடத்தக்க வகையில் பல்வேறு வகையான பாம்புகளை அவ்வப்போது காண முடியும்.
இந்த மலைப் பாம்புகள் கோழி உள்ளிட்டவற்றை வேட்டையாடி குடியிருப்பு பகுதிக்குள் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்நிலையில் நேற்று (பிப்.21) தடாகம் சாலை திருவள்ளுவர் நகரில் ஒருவரது இல்லத்திற்குள் சுமார் 6 அடி நீள சாரைப் பாம்பு ஒன்று வாசல் வழியாக வீட்டிற்குள் புகுந்துள்ளது.
அதனைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக வீட்டிற்கு வெளியே வந்து, வீட்டின் கதவை மூடி விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் வீட்டை திறந்து பார்த்த போழுது அந்த பாம்பு சோபாவில் சுருண்டு படுத்து கிடந்துள்ளது. இதையடுத்து வனத் துறையினர் வீட்டிற்குள் இருந்த பாம்பை லாவகமாக பிடித்து, அங்கிருந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.