ETV Bharat / state

1964 டிசம்பர் 23 புயலால் அழிந்த தனுஷ்கோடி.. மீண்டும் கட்டமைக்க மக்கள் கோரிக்கை! - DHANUSHKODI DISASTER

தனுஷ்கோடியில் பேரழிவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மீண்டும் தனுஷ்கோடியை கட்டமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இடிந்த நிலையில் உள்ள் கட்டடங்கள்
இடிந்த நிலையில் உள்ள் கட்டடங்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ராமநாதபுரம்: பேரழிவால் பாதிக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றளவும் குடிசை வீடுகளில் அடிப்படை வசதிகளான மின்சாம், குடிநீர், மருத்துவம் ஆகியவை இல்லாமல் வாழ்வதற்கே போராடி கொண்டிருக்கும் தனுஷ்கோடி மக்களின் வாழ்வு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பரப்பரபாக இயங்கிக் கொண்டிருக்கும் துறைமுகம், அதனருகேவுள்ள இரயில்வே நிலையத்தில் நிரம்பி வழியும் பயணிகள், இருபுறமும் நீல வர்ணத்தில் கடலும், இதமான காற்றும், எந்த நேரத்திலும் மீன் பிடிக்கும் மீனவர்கள் என தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றமடைந்த வணிக நகரமாக இருந்தது தனுஷ்கோடி.

ஆனால், 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி, மன்னார் வளைகுடாவில் உருவான புயலின் காரணமாக, ராமேசுவரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்திருந்த தனுஷ்கோடி நகரம் முழுவதும் அழிந்தது. அந்த கோரப்புயலின் தாக்கத்திலிருந்து இன்று வரை தனுஷ்கோடி மீளவே இல்லை. அன்று வீசிய புயலால் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகமே காணாமல் போயுள்ளது.

இடிந்த நிலையில் உள்ள் கட்டடங்கள்
இடிந்த நிலையில் உள்ள் கட்டடங்கள் (ETV Bharat Tamil Nadu)

புயலால், தனுஷ்கோடியில் இருந்த பெரிய கட்டடங்கள், பிள்ளையார் கோயில், தேவாலயம், இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் இடிந்து தரைமட்டமாயுள்ளது. தனுஷ்கோடி அடியோடு அழிந்த நிலையில், அப்பகுதி முழுவதும் மண் மேடாக மாறியது. ஆனால், புயலின் அடையாளமாக இன்றும் சிதலடைந்த தேவாலயமும், சில கட்டடங்கள் மட்டும் அப்பகுதியில் எஞ்சியுள்ளன.

இதையும் படிங்க: பர்வதமலைக்கு போகப் போறீங்களா?.. அப்போது இத தெரிஞ்சுகிட்டு போங்க!

புயலில் இருந்து தப்பிய தனுஷ்கோடியின் பூர்வகுடி மீனவர்கள் வேறு வழியின்றி வாழ்வாதாரத்திற்காக ராமேஸ்வரம் பகுதியில் வாழத்தொடங்கியுள்ளனர். இதன் பிறகு, கடந்த 2017 ஆண்டில் நெடுஞ்சாலை துறையின் மூலமாக அரிச்சல்முனை வரை சாலைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து வசதி மற்றும் சுற்றுலா பயணிகள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வந்ததால் தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

60 ஆண்டுகளை கடந்த தனுஷ்கோடி பேரழிவு:

தனுஷ்கோடி கடலில் உள்ள சாலை, இடிந்த கட்டடம்
தனுஷ்கோடி கடலில் உள்ள சாலை, இடிந்த கட்டடம் (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், தனுஷ்கோடி புயல் தாக்கி நேற்றுடம் (டிசம்பர் 22) ஞாயிற்றுக்கிழமை, 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. புயலால் தனுஷ்கோடி அழிந்து 60 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் புயலின் நினைவுகள் மறக்க முடிவில்லை என தனுஷ்கோடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றளவும், தனுஷ்கோடியில் 300க்கும் மேற்பட்ட பாரம்பரியமான மீனவ குடும்பங்கள் ஓலை குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், மாவட்ட நிர்வாகம் மீனவ குழந்தைகள் படிக்க 8ஆம் வகுப்பு வரையில் உள்ள நடுநிலைப்பள்ளியை செயல்படுத்தி வருகிறது. ஆனால், அவசர தகவல்களை பறிமாறிக்கொள்ள தகவல் தொடர்பு வசதி, மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

தனுஷ்கோடி மீண்டும் புத்துயிர் பெறுமா?

மேலும், தனுஷ்கோடி மக்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் வளர்ச்சி திட்டங்களை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்றளவும் மின்சாரம், மருத்துவம், குடிநீர் என அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால், இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமடைந்து வருவதுடன், மீனவ மக்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, அழிந்த தனுஷ்கோடியை மீண்டும் புத்துயிர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுற்றுலாப் பயணி பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இது குறித்து விருத்தாச்சலத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், “ தனுஷ்கோடி வாழ தகுதியற்ற இடமாக ஐ.நா சபை அறிவித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. பேரழிவு ஏற்பட்டு 60 வருடங்கள் கடந்துள்ளது. இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.