ஐதராபாத்: பெரிதும் பேசப்பட்ட ஜி7 நாடுகளின் சந்திப்பு நிறைவடைந்துள்ளது. 1975ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு தொழில்மயமாக்கப்பட்ட ஜனநாயக நாடுகளின் கூட்டமைப்பாகும். இதன் உறுப்பினர்களாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
முன்னாட்களில் இது ஜி 8 என ரஷ்யாவையும் உறுப்பினராகக் கொண்டிருந்தது. ஆனால் 2014ம் ஆண்டு கிரீமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து அந்நாடு இந்த கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நாடுகள் ஆண்டுதோறும் கூடி, உலக பொருளாதார நிர்வாகம், சர்வதேச பாதுகாப்பு மற்றும் இதர விவகாரங்கள் குறித்து விவாதிக்கின்றன.
ஜி7 நாடுகளுக்குள் முறையான ஒப்பந்தமோ, நிரந்தரமான செயலகமோ இல்லை. ஒவ்வொரு ஆண்டும் சந்திப்பை நடத்தும் நாடு ஏற்பாடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த ஆண்டு இத்தாலி மாநாட்டை நடத்தும் நாடாக உள்ளது, அடுத்த ஆண்டில் கனடாவில் மாநாடு நடைபெறுகிறது. கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத உறுப்பினராக இருக்கும் ஐரோப்பிய யூனியன் கண்டத்தில் உள்ள நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
மற்ற உலக அமைப்புகளான உலக வங்கி, ஐ.நா. உள்ளிட்டவையும் அழைப்பாளர்கள் என்ற முறையில் பங்கெடுக்கின்றன. முன்னதாகவே சில சந்திப்புகளில் இந்தியா பங்கெடுத்துள்ளது ஆனாலும், 2019 முதல் உறுப்பினர் அல்லாத நிரந்தர சிறப்பு அழைப்பாளராக இந்தியா பங்கெடுத்து வருகிறது. வெளித் தொடர்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்தியா இந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறது.
இந்த ஆண்டின் சிறப்பு அழைப்பாளர்களில் உக்ரைன் அதிபரான விளாடிமிர் செலன்ஸ்கி பங்கேற்றதன் மூலம், ரஷ்யா உக்ரைன் போர் குறித்து விரிவான விவாதம் நடத்தப்படுவதற்கான சூழல் உருவானது. ஜி7 உறுப்பு நாடுகளில் முடக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சொத்துக்கள் மூலம் 50 பில்லியன் அமெரிக்க டாலரை உக்ரைனுக்கு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.
இது தவிரவும், சட்டவிரோத அகதிகள் குடியேற்றம், ஆஃப்ரிக்காவில் முதலீடுகள், செயற்கை நுண்ணறிவு போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாடு உறுப்பு நாடுகளின் இருதரப்பு சந்திப்புகளுக்கும் வாய்ப்பளிப்பதாக இருந்தது. உக்ரைன் குறித்து ஜி7 நாடுகள் விவாதிக்கும் நிலையில், ரஷ்ய அதிபரான புடின் பேச்சுவார்த்தை மற்றும் போர் நிறுத்தத்திற்கான தனது நிபந்தனைகளை முன் வைத்திருந்தார்.
இதில், ரஷ்யாவால் உரிமை கோரப்படும் இடங்களிலிருந்து உக்ரைன் படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும், உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஜி7 மாநாட்டில் இந்த விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. எதிர்பர்த்தது போலவே புதினின் நிபந்தனைகள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. புற அழுத்தங்களால் ரஷ்யாவைப் பணிய வைக்க முடியாது.
ஜி7 அளவுக்கு அதிகமாக மதிப்பிடப்படுகிறதா? ஒரு காலம் இருந்தது. உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி 7 இருந்த காலம் அது. அப்போது, இந்த கூட்டமைப்பின் முடிவுகளுக்கு மதிப்பு இருந்தது. ஆனால் இனி அது உண்மை இல்லை. 2000ம் ஆண்டு முதலே உலக ஜிடிபியில் ஜி7 நாடுகளின் பங்களிப்பு தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சி மட்டுமின்றி, ஜி 7 நாடுகளின் பொருளாதாரமும் சரிவை சந்தித்துள்ளது. இதில் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் ஜனநாயக நாடுகளின் கூட்டமைப்பாகவே இந்த அமைப்பு தொடர்கிறது. மற்ற உலக நாடுகளின் கூட்டமைப்புகளான BRICS (Brazil,
Russia, India, China and South Africa) என்பது உலக மக்கள் தொகையின் 45 சதவிகித மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மாறாக ஜி7 10 சதவிகித மக்கள் தொகையைத் தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 2022ம் ஆண்டு நிலவரப்படி பிரிக்ஸ் நாடுகளில் பர்சேசிங் பவர் பாரிட்டி எனப்படும் வாங்கும் திறன் சமநிலை (PPP) 32 சதவிகிதமாக உள்ளது, இது 36 சதவிகிதமாக உயரக்கூடும்.
பிரிக்ஸ் மற்றும் ஜி7 அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டுகளில் மட்டுமே வித்தியாசம் கொண்டு இருக்குமே தவிர்த்து இரு அமைப்புகளின் பணிகளும் ஒன்றுதான். அதேபோல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் போன்றது. சீனா, இந்தியா, கஜகஸ்தான் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் அதில் உறுப்பினர்களாக உள்ளன. நான்கு பார்வையாளர் நாடுகள் மற்றும் ஆறு உரையாடல் நாடுகள் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு தனி அம்சங்கள் உண்டு. உலக மக்கள் தொகையில் 42% மற்றும் 25% குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது இந்த அமைப்பு.