ETV Bharat / opinion

இந்தியாவை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு... சீனாவிடம் இருந்து இந்தியா பாடம் கற்குமா?

காற்று மாசுபாட்டை குறைப்பதில் சீனாவிடம் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். சீனா இப்போது தூய்மையான காற்றை சுவாசித்து வருகிறது. சீனாவின் முறையை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.

குருகிராம் அருகே காற்று மாசு, புகை மூட்டத்துக்கு இடையே சாலையில் விரையும் வாகனங்கள்
குருகிராம் அருகே காற்று மாசு, புகை மூட்டத்துக்கு இடையே சாலையில் விரையும் வாகனங்கள் (Image credits-PTI)
author img

By Milind Kumar Sharma

Published : 3 hours ago

சென்னை: இந்தியாவின் வடபகுதியில் உள்ள நாட்டின் தலைநகரில் காற்றின் தர அளவு மிகவும் மோசமான அளவுக்கு சென்றிருப்பதாக செய்திகளில் இடம் பெற்று வருவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மேலும் கடும் நடவடிக்கைகளை எடு்கக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. கடந்த காலங்களில் சீனாவும் இது போன்ற சூழல்களை எதிர்கொண்டது. எனினும் கூட இந்த சூழலை இன்றைக்கு சீனா மாற்றியமைத்திருக்கிறது. காற்றின் மோசமான தர அளவைக் கொண்டிருந்த முக்கிய நகரங்கள் இப்போது சுத்தமான காறறு கொண்ட நகரங்களாகவும், தெளிவான நீலவானம் கொண்ட சூழலும் சீனாவில் நிலவுகின்றன.

உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பொறுப்பு: அனைத்து பகுதிகளிலும் வியாபித்துள்ள புகை மூட்டம் மற்றும் காற்று மாசுபாடுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில், சீனாவிடம் இருந்து இந்தியா நிச்சயமாக மதிப்பு மிக்க பாடங்களை கற்றுக் கொள்ளலாம். சீனாவின் முறையை கடைபிடிக்கும் எந்த ஒரு முயற்சியும் இந்தியா எதிர்கொண்டிருக்கும் தனித்தன்மை வாய்ந்த சூழல்கள் மற்றும் சவால்களுக்கு ஏற்றபடி நல்ல முறையில் செயல்படுத்த வேண்டி இருக்கிறது. இரு நாடுகளும் நீண்டகாலமாக தீவிர காற்றின் மோசமான தரம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. அண்மை ஆண்டுகளில் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சீனா கண்டுள்ளது.

ஒரு சிக்கலான பகுதியில் அதாவது காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒழுங்கு முறைகள் மற்றும் அவர்களின் உறுதியான முறையில் அமல்படுத்துவது போன்ற சீனாவின் அணுகுமுறையில் இருந்து இந்தியா பலன்களை பெற முடியும். அண்மை ஆண்டுகளில் காற்றின் தரத்தை மேம்படுத்த இணக்கமாக செயல்படாதவர்களுக்கு அபராதம் போன்ற மேலும் கடுமையான தர நிலைகளை அறிமுகப்படுத்தியது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கான குறிப்பிட்ட இலக்குகளை நிறைவேற்ற தவறும் உள்ளாட்சி அமைப்புகள் பொறுப்புடமையாக்கப்பட்டன.

விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதித்தல்: இது போன்ற தண்டிக்கும் அணுகுமுறை, சட்டப்படியான ஒரு பொறுப்புடமை கலாசாரத்துக்கு வித்திட்டது. மேலும் சுற்றுச்சூழல் வரைமுறைகளை மதிப்பதற்கு தொழிலகங்கள் கட்டாயத்துக்கு உள்ளாகின. நகரங்கள் அவற்றின் காற்றின் தரத்தை மேம்படுத்த தூண்டுகிறது.இதற்கு மாறாக இந்தியாவில் அமல்படுத்தும் முறைகள் வலுவிழந்து பாதிக்கப்பட்டுள்ளன. மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிலகங்களை பொறுப்புடமை ஆக்குவதில் தோல்வி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சுற்று சூழல் அமலாக்க சட்டங்கள் பெரும்பாலும் அமல்படுத்த முடியாமல் அல்லது பயனற்று இருக்கின்றன.

சீனாவைப் போன்ற உத்தியை பின்பற்ற, ஒழுங்குமுறை கட்டமைப்புகள் வெறுமனே உறுதியாக இருப்பது மட்டுமின்றி தவிர கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இந்திய நகரங்களில் தொழிலகங்களால் வெளியேறும் உமிழ்வுகள் பெரும் அளவு குறையும். காற்றின் தர நிலைகளை அமல்படுத்துவதில், ஒழுங்குமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதித்தல் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உள்ளூர் மற்றும் தேசிய செயல்பாட்டாளர்களை பொறுப்புடமையாக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.

மின்னணு வாகனங்களுக்கு முக்கியத்துவம்: சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய இரண்டாவது பாடம் என்பது தூய்மையான தொழில்நுட்பங்கள் மற்றும் மரபுசாரா எரிசக்தியை நோக்கி மாறுவது என்பதாகும். குறிப்பாக காற்று மற்றும் சூரிய ஒளி மின்சாரம் போன்ற தூய்மையான எரிசக்தியில் பிரமாண்ட முதலீடுகளை சீன அரசு மேற்கொள்கிறது. நகர்புற திட்ட முயற்சிகளில் மின்னணு வாகனங்கள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறியிருக்கிறது.

இதன் காரணமாக காற்று மாசு நேரிடுவதற்கு இரண்டு முக்கிய காரணிகளான இருந்த போக்குவரத்து மற்றும் எரிசக்தி உற்பத்தியின் விளைவாக வெளியேறும் உமிழ்வுகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்தன. நகரங்கள் தூய்மையான எரிபொருள் வளங்களை பெறுவது, குறைந்த உமிழ்வுகளை வெளியேற்றும் வாகனஙகள் என சீனா உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது இந்தியாவுக்கு மதிப்பு மிக்க மாதிரியாக இருக்கும். இந்தியாவும், சீனாவைப் போலவே, நிலக்கரியை நம்பியிருப்பதன் மூலம், குறிப்பாக மின்சாரத் துறையில் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்கிறது.

எனினும், இந்தியா உயர்ந்த பட்ச மரபுசாரா வளங்கள கொண்டுள்ளது. சூரிய ஒளி மற்றும் காற்று மூலம் மின்சார உற்பத்திக்கு மாறுவது என்பது சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறைப்பது மட்டுமின்றி மேலும் நீடித்து நிலைத்த வகையில் எரிசக்தி பாதுகாப்புக்கு தீர்வு காணமுடியும். இதற்கு ஈடாக மின்னணு வாகனங்களுக்கு முக்கியத்துவம் தருதல், மின்னணு வாகனங்களுக்கு ஊக்கத்தொகை அளித்தல், மின்னணு வாகனங்களுக்கு சார்ஜிங் அளிக்கும் நிலையங்களை விரிவாக்குவது ஆகியவற்றின் மூலம் முக்கிய நகரங்களின் தெருக்களை மூச்சடைக்க செய்யும் வகையில் இருக்கும் வாகன உமிழ்வை இந்தியா குறைக்க முடியும். மரபுசாரா எரிசக்தியை மேற்கொள்ளுதல், பசுமை போக்குவரத்தில் புரட்சி ஆகியவை இந்தியாவின் காற்றின் தரத்தை மேம்படுத்தி காலப்போக்கில் நீடித்து நிலைபெற செய்ய முடியும்

பசுமைத் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும்: கூடுதலாக, தொழிலக நடைமுறைகளை நவீனப்படுத்தல் மற்றும் தூய்மை படுத்தல் எனும் சீனாவின் முயற்சி என்பது சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு உத்தியில் முக்கியமான கூறாக விளங்கியது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் குறிப்பாக இரும்பு உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, நிலக்கரி சுரங்கங்கள் போன்ற தொழிலகங்களை மூடுதல் அல்லது மேம்படுத்துதல் என்ற நடவடிக்கைகள சீனா மேற்கொண்டது.

சில விஷயங்களில் அதிக மாசு அளவுகள் உள்ள பகுதிகளில் உள்ள தொழி்ற்சாலைகள், சுற்றுச்சூழல் பாதிப்பை சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. தீவிரமான சுற்றுச்சூழல் சீர்கேடு நிலவிய சூழலின் போது, அதிக அளவு உமிழ்வுகளை வெளிப்படுத்தும் தொழிலகங்களை தற்காலிகமாக மூடும் முடிவை சீனா உறுதியாக மேற்கொண்டது. இதன் மூலம் சிக்கலான காற்று தர நிலையானது மாறுவதற்கு உதவியது. இந்த அணுகுமுறையானது உள்ளூர் மட்டத்திலான அமலாக்கத்தின் மூலம் இந்தியா இதனை செயல்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கும்.

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி என்பது அதன் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் செலவுடன் சேர்ந்தே உள்ளது. கட்டுமானம், இரும்பு, ஜவுளி தொழிலகங்கள் சுத்தமான நடைமுறைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும். மேலும், கடுமையான கண்காணிப்பு மற்றும் அபராதங்கள் மூலம் உமிழ்வுகளுக்கு பொறுப்பேற்கும் வகையில், பசுமைத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றும்படி தொழிலகங்களை ஊக்குவிப்பது மிக முக்கியமானது.

காற்று மாசுக்கு எதிரான நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை நடைமுறையை சீனாவிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். காற்று தர கண்காணிப்பு கட்டமைப்புகளை விரிவாக்க பெரும் அளவில் சீனா முதலீடு செய்திருக்கிறது. நிகழ்நேர மாசு தரவு பொது வெளியில் கிடைக்கும் வகையில் உள்ளது. இந்த வெளிப்படைதன்மையானது, சுற்றுச்சூழல் தர அளவு குறித்து விழிப்புணர்வு அதிகரிப்பதற்கு கருவியாக அமைந்துள்ளது. பொது மற்றும் அரசாங்க நடவடிக்கைகளை உந்துதலாகவும் உள்ளது.

கடுமையான கண்காணிப்பு தேவை: நிகழ் நேர காற்று தரம் குறித்த தகவல் என்பது, தகவல் அறிந்த முடிவுகளை எடுக்க மக்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமின்றி, மாசுபாட்டை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படுவதை நிர்பந்திக்கும் சூழலை உருவாக்குகிறது. இந்த பகுதியில் இந்தியாவின் முன்னேற்றம் என்பது அதன் கண்காணிப்பு முறைகளில் குறிப்பிடத்தக்க இடைவெளி இன்னும் இருக்கிறது. மாசுபாடு வெளியே தெரியாத அளவுக்கு தீவிரமாக இருக்கும் தொலைதூர பகுதிகளைக் கொண்ட நகர்புறங்கள், கிராமப்புறங்களில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் நிலையங்களை விரிவாக்குவது மிகவும் முக்கியமானதாகும். மேலும் நிகழ் நேர காற்று தர தரவுகளை பொது வெளியில் கிடைக்க செய்வதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். கொள்கை முடிவுகளுடன் அதனை இணைக்க வேண்டும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை மேம்படுத்தப்படுவது மட்டுமின்றி, பொறுப்புடமை மற்றும் பதிலளிக்கக்கூடிய கலாச்சாரத்தை வளர்க்கிறது.

காற்று மாசுபாடு உத்தியில் சீனாவின் அணுகலில் பொது சுகாதாரமும் இணைந்த ஒன்றாக உள்ளது. புகை மூட்டம் மற்றும் காற்று மாசுபாட்டின் விளைவாக எதிர்மறை உடல்நல பாதிப்புகள் அங்கீகரிக்கப்படுகின்றன.பொது சுகாதார பாதுகாப்பின் பொருளில் சீனா அதன் சுற்றுச்சூழல் கொள்கைகளை வகுக்கிறது. மாசுபாட்டுடன் தொடர்புடைய எதிர்மறையான சுகாதார விளைவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் வகையில் அரசின் நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.இது போன்ற கடுமையான விதிமுறைகளுக்கு பொதுமக்களின் ஆதரவும் உள்ளது.

இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல்: வானில் வட்டமடித்த விமானங்கள்; ஸ்தம்பித்த விமான நிலையம்!

இதேபோல, இந்தியா காற்று மாசுபாடை சூழல் பிரச்னையாக மட்டும் கருதாமல், பொது சுகாதார அவசரம் என்ற ரீதியில் செயல்படவேண்டும். துகள்கள் போன்ற மாசுபடுத்திகள் சுவாசம் மற்றும் இதய நோய்களோடு தொடர்புபடுத்தப்பட வேண்டும்.இது நாட்டில் ஏற்கனவே நெருக்கடியான சுகாதார அமைப்புக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு பங்களிப்பை வழங்குகிறது.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் தேசிய, பிராந்தியம், உள்ளூர் அளவிலான வரிசையில் சீனாவின் மேலிருந்து கீழே என்ற அரசின் அணுகுமுறை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்கும் இலக்குகளை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும். இதனை அமல்படுத்தி இலக்குகளை அடைகின்றனவா என்பதை உறுதி செய்ய உள்ளாட்சி அமைப்புகளை பொறுப்புடமை ஆக்க வேண்டும்.

உறுதியான உத்திகள் தேவை: மாறாக இந்தியா, பரவலாக்கப்பட்ட அணுகுமுறையால் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறனில் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வெவ்வேறு வித்தியாசமான மட்டத்திலான பொறுப்புடமைகளைக் கொண்டுள்ளன. பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட அரசுகளுக்கு மத்தியில் சூழல் கட்டுப்பாடு என்பது மோசமானதில் இருந்து சீர்கெட்ட நிலைமைக்கு செல்கிறது. எனினும், மாநில அளவில், நகர அளவில் காற்று மாசுபாட்டை அமல்படுத்த உறுதியான உத்திகளை மேற்கொள்ளும்பட்சத்தில், இந்தியா தேசிய காற்று தர இலக்குகளின் பெரும் பலன்களை அடைய முடியும். இதனை நாடு முழுவதும் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் உருவாக்க வேண்டும். காற்று மாசு கட்டுப்பாடு என்பது தனிப்பட்ட பிராந்தியங்களின் விருப்பத்துக்கு உட்பட்டது அல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எனினும், சீனாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இந்த பாடங்கள் மதிப்பு வாய்ந்தவை. இந்தியா தமது நாட்டின் அடிப்படையில் தனித்தனமை வாய்ந்த சில சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இந்தியாவின் மாறுபட்ட புவியியல், அதிக அடர்த்தியான மக்கள் தொகை, எரிசக்திக்காக நிலக்கரியை சார்ந்திருப்பது ஆகியவை மாசு பாட்டை கட்டுப்படுத்துவதில் இப்போதைய குறிப்பிடத்தக்க தடைகளாக உள்ளன. இந்தியாவின் பெரும்பாலான தொழிலகங்களில் பொருளாதார, சமூக கருத்தியல் அம்சங்களும் அடங்கியுள்ளன. குறிப்பாக கிராமப் பகுதிகளில் செலவு வரம்புகள் காரணமாக பாரம்பரியமான மற்றும் சூழல் மாசை ஏற்படுத்தும் நடைமுறைகளை இன்னும் நம்பியிருக்கின்றன. ஆகையால், நாட்டின் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி தவிர, சுற்றுச்சூழல், பொது சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் நடுநிலையை கடைபிடிக்கும் வகையிலான கொள்கை மாற்றங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகள், பசுமைத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், தொழில்துறை மாற்றம், நிகழ்நேர கண்காணிப்பு, விழிப்புணர்வு மற்றும் பொது சுகாதார ஆலோசனை ஆகியவற்றை உள்ளடக்கிய பல முனை அளவீடு அணுகுமுறை, காற்று மாசுபாட்டைச் சமாளிக்கும் இந்தியாவின் தேடலில் முக்கியமானதாக இருக்கும்.

காற்று மாசுபாட்டுக்கு எதிரான சீனாவின் போராட்டத்தில் இருந்து முக்கியமான பாடங்களை இந்தியா கற்றுக்கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், இந்தியாவின் வேறுபாடு உடைய சமூக பொருளாதார கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் உண்மை தன்மையையும் உணர்ந்து இந்த பாடங்களை மேற்கொள்வது என்பது பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எழுத்தாளரின் கருத்துகள் ஆகும். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள உண்மைகள் மற்றும் கருத்துக்கள் ஈடிவி பாரத் கருத்துகளைப் பிரதிபலிப்பவை அல்ல.)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.