ETV Bharat / sports

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: தங்கம் வென்ற தமிழ்நாட்டு மங்கை நர்மதா! - NATIONAL GAMES 2025

உத்தரகாண்டில் நடந்து வரும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை நர்மதா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

தங்கம் வென்ற நர்மதா
தங்கம் வென்ற நர்மதா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 11:05 PM IST

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தின் டெராடூன் நகரில் நடைபெற்று வரும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் (National Games 2025), 10 மீட்டர் ஏர் ரைஃபிள் (10m Air Rifle) பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜு நர்மதா நிதின் (Raju Narmada Nithin) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சென்னை போரூரை சேர்ந்த இவரின் தந்தை ராஜு, சென்னை ஐஐடி-யில் உடற்கல்வி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய தாய் தமிழ்செல்வி, சகோதரர் நிதின் ஆவர். பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்த அவர், குருநானக் கல்லூரியில் மேற்படிப்பையும் முடித்துள்ளார்.

தங்கம் வென்ற நர்மதா பேட்டி (ETV Bharat Tamil Nadu)

மிகச்சிறப்பான எதிரணி, அபார வெற்றி

மஹாராணா பிரதாப் விளையாட்டு கல்லூரியின் துப்பாக்கி சுடும் போட்டியில் நடைபெற்ற பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் நர்மதா 254 புள்ளிகள் பெற்று முதலிடத்தை கைப்பற்றினார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த போர்ஸ் ஆர்யா ராஜேஷ் 252.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தையும், ஹரியானாவின் ரமிதா 230.4 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்து வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நர்மதா, "இந்த வெற்றி எனது கடின உழைப்பின் பலனாகப் பார்க்கிறேன். எதிர்கால இலக்கு - ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று தருவது தான்," என்று உறுதிபடக் கூறினார்.

இந்த தேசிய விளையாட்டுகளில் பங்கேற்ற பல்வேறு வீரர்கள் டெராடூன் ஷூட்டிங் ரேஞ்சின் தரத்தை பாராட்டினர். நர்மதா நிதின் பேசுகையில், "இங்கு உலகத் தரமான வசதிகள் உள்ளன. இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்த ரேஞ்சில் பயிற்சி செய்ய விரும்புகிறேன்." என்று தெரிவித்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவின் ஆசிய மற்றும் உலகளாவிய ஷூட்டிங் போட்டிகளில் பங்கேற்க நர்மதா நிதின் தயாராகி வருகிறார். அவரது கனவு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவை மென்மேலும் உயர்த்துவது என்பது அவரது பேட்டியின் வாயிலாகத் தெரிந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.