ETV Bharat / opinion

2024 விவசாயிகள் தினம்...நிலையான விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அதிகாரமளித்தல்! - 2024 விவசாயிகள் தினம்

இந்தியாவில் 2024ஆம் ஆண்டின் விவசாயிகள் தினத்தை கொண்டாடும் தருணத்தில் இந்திய விவசாயிகளிடம் முக்கியமான மாற்றத்துக்கு வித்திட்ட சவுத்ரி சரண் சிங்கை நாம் நினைவு கூரலாம். இதயத்தில் விவசாயியைக் கொண்ட அரசியல்வாதியாக அவர் இருந்தார்.

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கரும்புகள்
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கரும்புகள் (Image credits-ANI)
author img

By Indra Shekhar Singh

Published : Dec 24, 2024, 6:04 PM IST

ஹைதராபாத்: இந்தியாவில் 2024ஆம் ஆண்டின் விவசாயிகள் தினத்தை கொண்டாடும் தருணத்தில் இந்திய விவசாயிகளிடம் முக்கியமான மாற்றத்துக்கு வித்திட்ட சவுத்ரி சரண் சிங்கை நாம் நினைவு கூரலாம். இதயத்தில் விவசாயியைக் கொண்ட அரசியல்வாதியாக அவர் இருந்தார். உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு விவசாயத்தை முன்னெடுப்பதில் முக்கியமான குறிப்பிடத்தக்க பங்கை அவர் வகித்தார். இந்த அவரது ஒரு முன்னெடுப்பானது பொருளாதார நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் அந்த ஒட்டு மொத்த பிராந்தியத்தையும் வளர்ச்சியை நோக்கி செல்லவும் வழி வகுத்தது.

ஓரு காலகட்டத்தில் கரும்பு பொருளாதாரத்தில் அதிகப்படியான செறிவூட்டல் எனும் அச்சுறுத்தலை அவர் கண்டார், மேலும் பல்வகைப்படுத்துமாறு கூறினார். அவரின் உரிய தருணத்திலான ஆலோசனைகள் பின்பற்றப்படாததால் கரும்புப் பயிரிட்ட பிராந்தியத்தில் நீடிக்க முடியாத வளர்ச்சி ஏற்பட்டது. ஒருவேளை நமது தேசம், இப்போதைய அரசானது நிலையான நீடித்த வளர்ச்சிக்கான அவரது கருத்தின் படி நடப்பதற்கான தருணத்தை கொண்டிருப்பதாக இருக்கலாம்

இயற்கை விவசாயம்: நிலையான விவசாயத்திற்கு விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் என்ற கருத்தாக்கத்தின் தினமாக இதனை நமக்கு கொண்டு வந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக நமது பண்ணைகளின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு பெரும் அளவுக்கு கருத்துகள் கூறப்பட்டுள்ளன.ஆனால், அவற்றில் சிறிய அளவு மட்டுமே இலக்கை அடைந்துள்ளன. மோடி அரசின் தற்போதைய அறிவிப்பான இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்டில் ரூ.2481 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது. இது கடைகோடியில் இருக்கும் விவசாயிகளை சென்றடைந்தால் இது ஒரு நல்ல முன்னெடுப்பாகும். மண், தண்ணீர் ஆகியவற்றின் அழிவு, தொழிலக விவசாயத்தில் உரம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றுடன் நாம் பருவநிலை மாற்றத்தை சவாலாக எதிர்கொள்ள வேண்டும் எனில் இயற்கை விவசாயத்தை தீவிரமாக பின்பற்றுவது அவசியமாகும்.

அறுவடை செய்யப்பட்ட ஆலை கரும்புகள்
அறுவடை செய்யப்பட்ட ஆலை கரும்புகள் (credit - ETV Bharat Tamil Nadu)

நடைமுறையில், இயற்கை விவசாயமும் பல்வேறு அடிப்படை விஷயங்கள் காரணமாக பெரும் தொல்லை தருவதாக இருக்கிறது. உயர்ரக கரிம விதைகள், உற்பத்தி, இயற்கை விவசாய விளைபொருட்களை விற்பதற்கான சந்தை , உரிய விலை , சான்றிதழ் தர நிலை கேள்விக்கு உள்ளாதல் போன்ற சில முக்கியமான பிரச்னைகள் இயற்கை வேளாண்மையின் நீடித்த வளர்ச்சியை பாதிக்கின்றன.

இப்போது நாம் தீர்வுகளைப் பற்றி சிந்தனை செய்தால், நவீன தொழில்நுட்பத்துடன் பாரம்பரிய விவசாய முறைகளை நாம் அதிகரிக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது பெரும் நிறுவனங்களின் பிரிவுகளால் நமது விவசாயிகள் சுரண்டப்படுவதை இயற்கை விவசாய முறையை எடுத்துக் கொள்வதை அனுமதிப்பது என்பதல்ல. ஆனால், அதே நேரத்தில் விவசாயிகள், மண் வளம், நீர் வளம் ஆகியவற்றுக்கு ஆரோக்கியமான சூழலை முன்னெடுத்தல், வீழ்ச்சியடைந்த வருமானம், விவசாயிகளின் தற்கொலைகள் மற்றும் சூழலியல் அழிவுகளில் இருந்து கிராமத்தின் சூழல்முறைகளை நீடித்து வளர்த்தெடு்கக வேண்டும்.

சுத்திகரிக்கப்படாத சர்க்கரை உற்பத்தி: சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளைக் குறிக்கும் இந்த நாளில், இதனை மேற்கு உத்தரப்பிரதேசம், ஹரியானாவின் கரும்பு பயிரிடும் பகுதிகளில் இருந்து நாம் அவசியம் தொடங்க வேண்டும். இந்த பகுதிகளில் கரும்புக்கு விவசாயிகளுக்கான பணத்தை தராமல் சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு சங்கங்கள் கடனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இங்கிருந்து முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். இதில் சர்க்கரை ஆலைகளை மட்டும் நம்புவதற்கு பதிலாக பரவலாக்கப்பட்ட பாரம்பரிய சுத்திகரிக்கப்படாத சர்க்கரை உற்பத்தி செய்யும் குடிசை தொழிலை அரசு மீண்டும் தொடங்க வேண்டிய தேவை இருக்கிறது. இதுதான் நமது பண்டைய சர்க்கரை பொருளாதாரத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்தது.

இன்றைய காலகட்டத்தில் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக நாட்டு சர்க்கரைக்கு தேவை அதிகரித்திருக்கிறது. இதற்கிடையே, உணவு முறையில் வெள்ளை சர்க்கரையை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் சல்பரின் பாதகமான விளைவுகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கிடையே சமூக பொருளாதாரம், விவசாயிகளின் கடன், விளைவித்த பொருளுக்கு பணம் கிடைக்காமை உள்ளிட்ட அம்சங்களைப் பார்க்கும்போது கரும்பு விளைவிக்கும் விவசாயிகள் அழுத்தத்திலும், ஆதரவு இன்மையும் கொண்டும் உள்ளனர். ஆகவே பெரும்பாலும் கரும்பு உற்பத்தி செய்யும் பிராந்தியத்தில் இருந்துதான் விவசாயிகளின் போராட்ட வரலாறு தொடங்கி இருக்கிறது.

வேளாண் உற்பத்தியாளர் அமைப்பு: தீர்வுகளுக்கு நாம் திரும்புவோம். விவசாயிகளுக்கு சொந்தமானதாக அல்லது கூட்டுறவு அடிப்படையில் நிதி உதவியுடன் கூடிய பாரம்பரிய சுத்திகரிக்கப்படாத சர்க்கரை உற்பத்தி செய்யும் மாதிரியை தொகுதிகளில் தொடங்க வேண்டும். இந்த உற்பத்தி பிரிவுகள் இயற்கை விவசாயம் அல்லது ரசாயன விவசாயம் கொண்டதாக வகைப்படுத்தப்படலாம் மற்றும் கண்காணிக்கப்படலாம். இயற்கை முறையில் கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களது கரும்பை சர்க்கரை, தூளாக்கப்பட்ட சர்க்கரை, வெல்லம் உள்ளிட்டவையாக மாற்றினால் பெரும் ஊக்கம் பெறுவர்.

வெல்லம் தயாரிக்கும் பணி
வெல்லம் தயாரிக்கும் பணி (credit - ETV Bharat Tamil Nadu)

கூட்டுறவு மாதிரி அல்லது வேளாண் உற்பத்தியாளர் அமைப்பை உபயோகித்து சிறப்பு வாய்ந்த பிராண்ட் பெயரின் கீழ் அவர்கள் சந்தைப்படுத்த முடியும். விற்பனை செய்து விட்டு பல ஆண்டுகளாக பணத்துக்கு காத்திருக்காமல் அல்லது கடனில் மூழ்காமல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் ஊக்கத்தொகையையும் அவர்கள் ஈட்ட முடியும். கிராமம் முதல் நகரம் வரை சர்க்கரை என்பது ஒவ்வொரு நாளும் தேவைப்படும் பொருளாகும். இந்தியாவை தாண்டியும் கூட ஏற்றுமதி செய்ய முடியும்.

விவசாயிகள் நடத்தும், சொந்தமாக கொண்டிருக்கும் கூட்டுறவு அமைப்புகள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்பு ஆகியவற்றின் கீழ் ஒரு முறை அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டால், இயற்கை முறையில் கரும்பு விளைவிக்கும் நீடித்து நிலைக்கும் விவசாயிகள் டிஜிட்டல் சந்தை மற்றும் பல்வேறு சந்தையின் போக்குகளையும் ஆராய முடியும். இது போன்ற பிரிவுகளை உருவாக்கவும், இந்த சிறிய தொழிலகங்களுக்கு தொழில்நுட்ப அணுகலைக் கொடுப்பதற்கும், அரசு, நிதி ரீதியான முன்னெடுப்புகளையும் மேற்கொள்வது தேவையாக உள்ளது. சவுத்ரி சரண் சிங்கின் நிலத்தின் அதிகப்படியான செறிவூட்டலை அகற்றுவதற்கும், அவர்கள் பல்வகைப்படுத்துவதற்கும் இது ஒரு வழியாகும். தவிர நீடித்து நிலைத்த வளர்ச்சியை நோக்கிய பாதையை உருவாக்குவதாகவும் இது இருக்கும். விவசாயிகளை அடிமைகளாக நடத்தும் தொழிலகங்களின் பிடியில் இருந்து விலகி இருக்கவும் உதவும்.

மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள்: விவசாயிகள் முன்னெடுக்கும் கரும்பு விதை உற்பத்தி மையங்கள், விவசாய வேளாண் விஞ்ஞானிகளுக்கு ஆதரவு அளிக்க பிராந்தியத்தின் இறையாண்மையை கட்டமைப்பதை நோக்கிய முன்னெடுப்புகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சந்தை பொருளாதாரத்தை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்.

இறுதியாக, இயற்கையாக கரும்புகளை உற்பத்தி செய்வோருக்கு குறைந்த விலை ஆதரவு தளத்தை அரசு அறிமுகம் செய்யலாம். ரசாயனம் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கரும்புகளுக்கான சர்க்கரை ஆலைகளுக்கு இணையான ஒரு முறையை இயற்கையாக கரும்பு விளைவிக்கும் விவசாயிகளுக்கும் உருவாக்க வேண்டும். இத்தகைய சில வழிகள் வாயிலாகத்தான் சவுத்ரி சரண் சிங் பிராந்தியத்தில் நெகிழ்வு தனமை மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கை நாம் அடைய முடியும். ஒருமுறை இந்த முறை வெற்றி பெற்று விட்டால், மற்ற பகுதிகளும் இயற்கை விவசாயம் மற்றும் நிலையான விவசாயத்தை பின்பற்றி அதன் பக்கம் திரும்பும் என்ற நம்பிக்கையை உணர முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.