ஹைதராபாத்: டமாஸ்கஸ் வீழ்ச்சி என்பது காபூல்,தாகா, கொழும்பு ஆகியவை சீர்குலைவு அடைந்ததை ஒத்திருக்கின்றன. சிரியாவில் எப்படி அதன் அதிபர் பாஷார் அல் ஆசாத் எப்படி நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தாரோ அதே போல மேற்குறிப்பிட்ட நாடுகளின் தலைவர்களும் நாடுகளை விட்டு வெளியேறினர்.
ஆசாத்தின் ஆட்சி, கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் ஆகியவற்றுக்கு இடையேயான மோதல் சிரிய அரசின் சீர்குலைவுடன் டிசம்பர் 8ஆம் தேதி முடிவுக்கு வந்தது. கிளர்ச்சியாளர்கள் குழு தலைநகர் டமாஸ்கஸ் நகரை கைப்பற்றியது. எனவே அதிபர் ஆசாத் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேறி நீண்டகால ஆதரவாளரான ரஷ்யாவின் விளாடிமீர் புதினிடம் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
அதிபர் ஆசாத்தின் அடக்குமுறை: சிரியாவின் தற்போதைய சூழலில் தொடர்புடைய உண்மைகள் அனைத்தையும் அறிய முடியாவிட்டாலும், இலங்கை, வங்கதேசத்துடன் ஒப்பிட முடியும். அங்கெல்லாம் அரசுகளை தூக்கிய எறிய பெரும் அளவில் கிளர்ச்சியாளர்கள் திரண்டனர். மாணவர்களின் பிரதிநிதி நாட்டின் கட்டுப்பாட்டை மேற்கொண்டார் அல்லது ஆப்கானிஸ்தானில் தோகா ஒப்பந்தத்தின் விளைவாக தாலிபான்கள், நாட்டை கைப்பற்றினர்.
நெருக்கமாக பார்த்தோம் என்றால், இந்த மோதல் எவ்வாறு பரந்த வரைறயறைகளை கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இதனை கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான மக்களின் கிளர்ச்சி என்று வெறுமனே சொல்லி விடமுடியாது. சிரியாவின் கிளர்ச்சி என்பது, 2011ஆம் ஆண்டின் பெரும் மக்கள் எழுச்சியின் தொடர்ச்சியாகும். அப்போது ஆசாத் அரசு அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது. போராட்டத்தில் ஈடுபட்டோர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். துன்புறுத்தப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு காணமல் போயினர்.
ஆட்சிக்கு எதிராக பெரும்பாலான போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் ஏந்தினர். அவர்களில் பெரும்பான்மையினர் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆவர். அல்கைய்தா இயக்கத்தின் உறுப்பினர்கள் எதிர்ப்பு படையுடன் இணைந்தனர். இதன் மூலம் இந்த இயக்கத்துக்கு தீவிரவாத முத்திரை குத்தப்பட்டது. எனவே சிரியாவுக்கு எதிராக அண்டை நாடுகளில் இருந்து வெளிப்படையான ஆதரவு கிடைப்பதில் நம்பிக்கை குறைவு ஏற்பட்டது.
அனைத்து மட்டத்திலும் ஒருங்கிணைந்த தாக்குதல்: இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆசாத்தின் ஆட்சி, லெபனான் ஹிஸ்புல்லா, ஈரான் ஆகியவை ஆதரவு தெரிவித்தன. ஆசாத்தின் ஆட்சியில் சிரியாவில் நிலைமை தொடர்ந்து கொடூரமாக இருந்தது. குறிப்பாக இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்குப் பின்னர் அது லெபனான் பொருளாதாரத்தையும், மேற்கு ஆசியாவில் இஸ்ரேலுக்கு எதிரான பெரிய ஆதரவாளரான ஈரானின் பொருளாதாரத்தையும் தீவிரமாக பாதித்தன.
ஹமாஸுக்கு எதிரான குழுக்கள் வலுப்பெற்றன. ஒருங்கிணைந்த தாக்குதல்களை தொடுத்தன. எனவே ஹமாஸின் வீழ்ச்சியின் பாதிப்பால் ஆசாத் தமது ராணுவ வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அலெப்போ நகரை கைப்பற்றல் தொடங்கி, இட்லிப், சாமா ஆகிய நகரங்களைத் தொடர்ந்து கடைசியாக டமாஸ்கஸ் நகரும் கைப்பப்பற்றப்பட்டது. எனவே அனைத்து மட்டத்திலுமான ஒருங்கிணைந்த தாக்குதலால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த குடும்ப ஆட்சிக்கு முடிவு எற்பட்டதால் ஆசாத் வலுக்கட்டாயமாக நாட்டை விடடு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. எதிர்கட்சி படைகள் கடந்தவாரம் சிரியாவை கைப்பற்றியபோது மிகவும் சிறிய அளவில் கூட எதிர்ப்பு எழவில்லை. சிரியாவின் பெரிய அமைப்பான ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம், தலைநகர் டமாஸ்கஸ் உள்ளிட்ட இடங்களில் இருந்த பெரும்பாலான ராணுவ நிலைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
ஈரானுக்கு பின்னடைவு: சிரியாவில் விஷயங்கள் எவ்வாறு வெளிப்பட்டன மற்றும் மேற்கு நாடுகளின் எதிர்வினை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய கிழக்கில், இந்த சூழல் நிலை மேற்குக்கு உத்திப்பூர்வமான சாதக நிலையை கொடுத்திருப்பதாக விவாதிக்கக் கூடும். இதன்காரணமாக ஈரான் பாதிக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது. ஆசாத் ஆட்சியின் வீழ்ச்சி என்பது ஈரான், சிரியா, ஹிஸ்புல்லா ஆகிய ஆக்சிஸ் எதிர்ப்பு கூட்டணி, தெஹ்ரானின் பிராந்தியத்தைச் சுற்றியுள்ள போராளிக் குழுக்கள் மற்றும் அதன் கூட்டாளிகளை ஆதரித்தது என்ற பல தசாப்த கால உத்திக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆசாத்தின் கீழான சிரியா, இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பை தொடர்ந்து தக்க வைக்க முழு மேற்கு ஆசியாவிலும் தேவையான எல்லாவற்றையும் செய்தது.
ஈரான், ஹிஸ்புல்லா, ஆசாத் ஆட்சி ஆகியவற்றுக்கு இடையே முக்கிய தொடர்பாக டமாஸ்கஸ் நிர்வகிக்கப்பட்டது. சிரியாவில் ஆசாத்தின் கொடூரமான ஆட்சியை பற்றி நன்கு தெரிந்திருந்தும் வெகுஜன எழுச்சிக்கு எதிரான ஆசாத் ஆட்சியை ஆதரிக்கும் ஈரானின் முடிவு ஒரு மோசமான விளையாட்டாக ஆனது. ஈரானும் ஹிஸ்புல்லாவும் சிரியர்களின் மீதான ஆசாத்தின் கொடுங்கோன்மை ஆட்சியின் ஆதரவாளர்களாகக் கருதப்பட்டனர், அதே நேரத்தில் கருத்து சுதந்திரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். முன்பு மேற்கு ஆசிய எதிர்ப்புப் போராளிகளின் 'மீட்பர்களாக' காணப்பட்ட ஈரான் மீதான நம்பகத்தன்மைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
ஆசாத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு நிபந்தனையற்ற, அதீத ஆதரவை ஈரான் வெளிப்படுத்தியதால், பாலஸ்தீனம் காரணமாக சன்னி, ஷியா நாடுகள் என்ற பிளவு ஏற்படத் தொடங்கியது. இஸ்ரேலை சுற்றியுள்ள ஷியா நாடுகள் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக செயல்பட்டன. அதே நேரத்தில் அரபு நாடுகள் குறிப்பாக சன்னி நாடுகள் பாலஸ்தீனத்துக்கான ஆதரவை குறைத்துக் கொண்டன. இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை இதனை துல்லியமாக கணித்தன.தாலிபான் தலைமைக்கு ஆதரவு அளித்தது போல ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பிடம் நெகிழ்வான அணுகுமுறையை மேற்கொள்வதை நோக்கி சென்றன.
அமெரிக்கா ஆதரவு: ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பிடம் டமாஸ்கஸ் வீழ்ந்த உடன் அறிக்கை வெளியிட்ட ஜோ பைடன், சிரியாவில் நிலவும் சூழல்களை அமெரிக்கா உன்னிப்பாக கண்காணிக்கிறது என்று கூறியிருந்தார். அபு முகமது அல் ஜுலானி என்ற பெயரில் செயல்படும் அஹ்மத் அல் ஷரா அமைப்பின் அறிக்கையின் விளைவாக ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் தலைமையை சுட்டிக்காட்டியது. கூடுதலாக, சில சிரியா குழுக்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது குறித்து பைடன் குறிப்பிட்டிருந்தார்.
ஆசாத் ஆட்சிக்கு எதிரான ஒருங்கிணைந்த தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு, பின்னணியில் ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்கலாம் என இஸ்ரேலுடனான எல்லையில் விஷயங்கள் வெளிப்படும் விதத்தில் இருந்து தெரிய வருகிறது. தேசத்துக்குள் ஒருங்கிணைந்த சக்திகள் எழுச்சி பெற்றன. பொறியாளராக இருந்து அரசியல்வாதியானவர் அதன் இடைக்கால பிரதமர் என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அவர்களைச் சுற்றியுள்ள சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையில் அவர்கள் பிணைக்கப்படுவதற்கு முன்பு நீடித்திருப்பதற்கான உத்தியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதால் இஸ்ரேல், துருக்கி, ரஷ்யா, ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகியவை நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தின. ரஷ்யா, ஈரான் இரண்டும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டன. அதே நேரத்தில் சிரியாவின் எல்லையில் உள்ள இஸ்ரேல் சுதந்திரமான போக்கில் உள்ளது.
சிரியாவை கைப்பற்றிய சக்திகள், நாட்டில் மீண்டும் வலுவை கொண்டு வருவதற்கான திறன் மற்றும் ஆற்றலை கொண்டிருக்கின்றோம் என்பதை சர்வதேச சமூகத்துக்கு உணர்த்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.எவ்வாறாயினும், சிரியா ஆப்கானிஸ்தான் வழியில் செல்கிறதா அல்லது அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜனநாயக வழியைத் தொடர முடிவுசெய்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.