தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

சீனா-தென் கொரியா-ஜப்பான் முத்தரப்பு உச்சி மாநாடு: இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? - China japan korea Trilateral summit - CHINA JAPAN KOREA TRILATERAL SUMMIT

மே மாதம் சியோலில் நடைபெற்ற சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையிலான முத்தரப்பு உச்சி மாநாட்டில் பிராந்தியத்தில் அமைதியை பேணுவது, பொருளாதார வழித்தடம், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் என்ன? இதனால் இந்தியா எதிர்கொள்ளும் தாக்கங்கள் என்ன? என்பது குறித்து ஈடிவி பாரத் அரூனிம் புயானிடம் நிபுணர் விளக்குகிறார்...

Etv Bharat
China South Korea-Japan flags (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 8:29 PM IST

டெல்லி: கடந்த மே மாதம் சியோல் நகரில் தென் கொரியா, ஜப்பான், சீனா ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொண்ட முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வடகிழக்கு ஆசிய பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவால் நிலவும் அமைதியற்ற சூழல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

இந்த முத்தரப்பு உச்சி மாநாட்டில் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol), சீனப் பிரதமர் லி சியாங் (Li Qiang), ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா (Fumio Kishida) ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென் கொரியா, சீனா, ஜப்பான் ஆகியவற்றுக்கு இடையே வர்த்தகம், முதலீடுகளை பெருக்க வெளிப்படையான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் தலைவர்கள் முடிவெடுத்ததாகவும், ஜப்பான் மற்றும் தென் கொரியாவை பாதுகாப்பு மற்றும் சுதந்திர வர்த்தகத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முத்தரப்பு சந்திப்பை அடிக்கடி நடத்த வேண்டும் என்று தலைவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. தென் கொரியா, ஜப்பான், மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளிடையே முத்தரப்பு உச்சி மாநாடு நடப்பது இது முதல்முறையல்ல. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்த நாடுகளிடையே முத்தரப்பு சந்திப்பு தொடங்கியது.

இதுவரை 9 முறை முத்தரப்பு உச்சி மாநாடுகள் இடம் பெற்றுள்ளன. கடைசியாக கரோனாவுக்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. அதன் பின் ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநாடு மீண்டும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

2024ல் நடைபெற்ற முத்தரப்பு உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் என்ன?

இது குறித்து ஷில்லாங் பகுதியைச் சேர்ந்த ஆசிய சங்கமம் சிந்தனைக் குழுவை சேந்த கே.யஹோம் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், மூன்று நாடுகளும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் பரந்த பிராந்தியத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் தங்கள் உறவுகளை நிர்வகிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக கூட்டு அறிக்கையில் தெரிவிக்கிறது.

இது சீனா மற்றும் ஜப்பானின் தூதரக ரீதியிலான நடவடிக்கையாக இப்பகுதியில் சில இயல்பு நிலையை கொண்டு வரும். தென் சீனக் கடலில் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சீனா மோதலில் உள்ளது. தைவான் மற்றும் ஜப்பானின் கிழக்கு சீனக் கடலில் உள்ள சென்காகு தீவுகள் மீது சீனா உரிமை கோருகிறது.

இதற்கிடையில், தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியாவின் நடவடிக்கைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தொடர்கிறது. முத்தரப்பு உச்சி மாநாட்டைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிட்டு, மூன்று நாடுகளும் தங்களுக்குள்ளான ஒத்துழைப்பை பெருக்கும் நோக்கத்தை கொண்டு இயங்கி வருகின்றன.

மேலும், இந்தோ-பசிபிக் பகுதியில் அதிகரித்து வரும் அமெரிக்கா-சீனா போட்டியின் பின்னணியில் பல்வேறு நிலைகள் காத்திருக்கின்றன. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் போர்க் குணத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் உட்பட பல முயற்சிகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்குகிறது.

சமீபத்தில், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய SQUAD என்ற புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது. இருப்பினும், முத்தரப்பு உச்சி மாநாட்டின் மூலம், பிராந்தியத்தில் பாதுகாப்புக்காக சீனா என்ன செய்தாலும் அதற்கு ஜப்பான் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்து உள்ளது.

பிராந்தியத்தில் பாதுகாப்பிற்காக சீனாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை, முத்தரப்பு உச்சி மாநாட்டின் நோக்கம் தைவான் பிரச்சினையாக இருக்கலாம். தைவானின் புதிய அதிபர் லாய் சிங்தே, சீனாவிடம் இருந்து தைவானின் சுதந்திரத்தை பாதுகாப்பது குறித்து பெரிய அளவில் குரல் கொடுத்து வருகிறார்.

சீன தைபேயில் புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சீனா அங்கு தொடர்ச்சியான கடற்படைப் பயிற்சிகளை நடத்தியது. மேலும், தைவானில் அமெரிக்காவின் பங்கு அதிகரித்து வருவதால், அந்த பிராந்தியத்தில் மோதலில் ஆர்வம் காட்டவில்லை என்று சீனா சொல்வது சீனாவின் யுக்தி. இதற்கிடையில், தைவான் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்து கொரியாவும் கவலை அடைந்துள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் மோதல் போக்கை குறைக்க தென் கொரியா உச்சி மாநாட்டை நடத்தியது. தென் கொரியா அனைத்து நாடுகள் அடங்கிய கூட்டுறவு கட்டமைப்பை விரும்புகிறது மற்றும் பிராந்தியத்தில் மோதல்களை குறைக்க போதிய நடவடிக்கைகளை எடுக்க நோக்கமாக கொண்டு உள்ளது.

கடந்த 1953ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், சீனாவுடன் பல்வேறு வகைகளில் உறவை ஆழமாக வேரூன்றி பொருளாதாரத் தொடர்பை கொண்டுள்ளது தென் கொரியா. கடந்த 2015 முதல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துடன் சீனாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறியதாக" அவர் கூறினார்.

முத்தரப்பு உச்சி மாநாட்டால் இந்தியா எதிர்கொள்ளும் தாக்கம் மற்றும் அழுத்தம் என்ன?

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் இந்த முத்தரப்புக் கூட்டணி தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல்சார் கள விழிப்புணர்வு, கடற்கொள்ளையர் எதிர்ப்பு முயற்சிகள் ஆகியவற்றில் சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு பிராந்தியத்தின் பாதுகாப்பு சூழலை பாதிக்கிறது.

இந்தியாவின் மூலோபாய நலன்கள், சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பகுதியை பராமரிப்பதில் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் வலுவான இருதரப்பு உறவுகளை பராமரிக்கிறது. அதே நேரத்தில் சீனாவுடனான அதன் உறவு மிகவும் சிக்கலானது.

முத்தரப்பு கூட்டு அமைப்பின் மூலம் பிராந்திய அமைதியை நிலைநாட்டுவது குறித்து பேசினாலும், அது இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளில் நேரடி தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. இந்தியாவும் இரண்டு முத்தரப்புக் கூட்டணிகளைக் கொண்டுள்ளது. ஒன்று அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் மற்றொன்று ரஷ்யா மற்றும் சீனாவுடன் RIC எனப்படும் ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா என்ற கூட்டமைப்பாகும்.

இந்தியா அங்கம் வகிக்கும் ஆர்ஐசி முத்தரப்பு கூட்டணி ஜப்பானை குறிவைப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. அதேபோல், இந்தியா- அமெரிக்கா, ஜப்பான் முத்தரப்பு கூட்டணி என்பது சீனாவை குறிவைப்பது என்று அர்த்தமல்ல. அதேநேரம், சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையேயான முத்தரப்பு கூட்டணி, இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்கா மற்றும் குவாட் ஆகிய நாடுகளுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இந்தியா மற்றும் ஜப்பானின் நிலைப்பாட்டை மாற்றாது என கருதப்படுகிறது.

இதையும் படிங்க:சமரசத்திற்கு மோடி தயாரா? நாட்டின் வளர்ச்சிக்கு இவையெல்லாம் கண்டிப்பாக தேவை! - PM Modi NDA Alliance

ABOUT THE AUTHOR

...view details