ETV Bharat / opinion

நீல கார்பன், கார்பன் வரவு மற்றும் வர்த்தகம்: முற்றிலும் கார்பன் அற்ற நிலை எனும் கடினமான பயணம்! - THE BUMPY ROAD TO NET ZERO

2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கார்பன் வரவு வர்த்தக திட்டம் குறித்த வரைவு அறிக்கையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

கார்பன் அற்ற நிலை எனும் கடினமான பயணம்
கார்பன் அற்ற நிலை எனும் கடினமான பயணம் (Image credits-Etv Bharat)
author img

By C P Rajendran

Published : Feb 17, 2025, 10:49 PM IST

ஹைதராபாத்: பருவநிலை மாற்ற பேரழிவுகளை தணிப்பதற்கான முயற்சிகள் வேகம் பெற்று வருகின்றன. நீல கார்பன் போன்ற யோசனைகள், கார்பன் தணிப்பு நடவடிக்கைகள், வரவுகள் மற்றும் வர்த்தகம் ஆகியவை பருவநிலை மாற்ற அறிக்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன.

பருவநிலை மாற்றம், சூழலியல் பன்முகத்தன்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் நிலை குறித்த அறிக்கையை கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச வளங்கள் மையம் பிரசுரித்தது. அப்போது "நாம் தொடர்ந்து இதே பாதையில் பயணித்தால், பல்லுயிர் பெருக்க சிக்கல் மற்றும் பருநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்த உலகம் மிகவும் சாதகமான அம்சம் கொண்ட கூட்டாண்மையை இழக்க நேரிடும் ஒரு மோசமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கையும் அளித்தது. குறிப்பாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சிறிய தீவில் உள்ள கடலோர சமூகத்தினர், உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை தாக்கங்களில் இருந்து மீளும் தன்மை ஆகிய வாழ்வாதாரத்தில் சிக்கலான வளங்களை இழக்க நேரிடும்,"என்ற எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறது.

குழுக்கள் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது, சர்வதேச பருவநிலை மாற்றத்தின் காட்சியில் ஒரு புதிய பொருளாக நீல கார்பன் பற்றி கூறப்பட்டுள்ளது. நீல கார்பன் என்பதில் கார்பன் என்பது கடல் மற்றும் கடலோர சூழல் முறைகளில் சேமிக்கப்படுகிறது. நீலம் என்பது தண்ணீரை மூலமாக சுட்டிக்காட்டப்படுகிறது. பெரும் அளவிலான நீல கார்பன், கார்பன் டைஆக்சைடாக (சிஓ2)கடல் பகுதிகளில் உ்ள்ளது. சிறிய பகுதி அளவு மற்றும் நீருக்கு அடியில் உள்ள வண்டல் பகுதி, கடலோரப்பகுதிகளில் வளரும் தாவரங்கள், மண், திமிங்கலங்கள் முதல் பைட்டோபிளாங்க்டன்கள் வரையில் உள்ள கடல் நீர் வாழ் உயிரினங்களில் சேமிக்கப்படுகின்றன. மாங்குரோவ் காடுகள், கடற் புற்கள், கெல்ப் மற்றும் அலை சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட இதர வளங்களில் நீல கார்பன் சூழல் முறைகள் உள்ளன.

இந்த கார்பன் சேமிக்கும் முறைகளின் திறன்கள், காடுகளுடன் ஒப்பிடுவது என்பது சிஓ2வை ஈர்க்கும் வேகம் பகுதி அளவே திறன் கொண்டதாக , சிதைவுறுவதில் குறைந்த வேகம் கொண்டதாக இருக்கும். ஆக்சிஜன் இல்லாத மண் பரப்பு, கார்பனை சேமிப்பதில் சாதகமான சூழலைக் கொண்டிருக்கும். கடலில் 0.2 சதவிகித பகுதியில் 50 சதவிகிதம் அளவுக்கு கார்பன் அடக்கம், நீடித்த உப்பின் உள்ளடக்கம், வெப்ப மாற்றங்கள், அலைகள் ஓட்டம் மற்றும் புயல் தோன்றுதல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

பருவநிலை தணிப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றுக்கு இடையே, இந்த தண்ணீர் சூழ்ந்த சூழல் முறைகளில், பருவநிலை தணிப்பின் தாக்கம் மற்றும் கடலோர சமூகங்களுக்கு ஆதரவு அளித்தல் என்பது பெரும்பாலான மேம்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக விரைவாக குறையும் அல்லது அழிவுக்கு உள்ளாகும். பருவநிலை மாற்ற பேரழிவுகளை தணிப்பதற்கான முயற்சிகள் வேகம் பெற்று வருகின்றன. நீல கார்பன் போன்ற யோசனைகள், கார்பன் தணிப்பு நடவடிக்கைகள், வரவுகள் மற்றும் வர்த்தகம் ஆகியவை பருவநிலை மாற்ற அறிக்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன.

கார்பன் வர்த்தக முறைகள்

நீல கார்பன் என்பது சிஓ2வை சேமிப்பதாக இருக்கிறது. கார்பன் தணிப்பு நடவடிக்கைகள் என்பது ஒரு வர்த்தக முறையாக, உமிழ்வுகளை முழுவதுமாக நீக்குதல் அல்லது தவிர்த்தல், குறைத்தல் ஆகியவற்றை நோக்கிய திட்டங்களில் முதலீடு செய்வது என்பது பசுமை குடில் வாயு உமிழ்வுகளுக்கு ஈடுகட்டுவதாக இருக்கும். 1997ஆம் ஆண்டின் கியோட்டோ நெறிமுறையின் கீழ் கார்பன் வரவுகளை பணமாக மாற்ற முடியும். இது அமைப்புகளை கார்பன் உமிழ்வுகளை குறைத்தல், கார்பன் மூழ்குவதை பாதுகாத்தல் மற்றும் கார்பன் தன்னார்வ சந்தையில் வர்த்தகத்தை வரவு வைக்க அனுமதிக்கும். ஒரு கார்பன் வரவு என்பது சிஓ2வை ஒரு மெட்ரிக் டன் அளவுக்கு நீக்குதல் அல்லது தவிர்த்தல், குறைத்தல் என்பதை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் இருக்கும்.

மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகிய பெரும் நிறுவனங்கள் கார்பன் தன்னார்வ சந்தையின் ஒரு பகுதியாக இருப்பதற்கு கார்பன் நடுநிலைமை என்ற நிலையை அடைவதற்கான இலக்குகளை நிர்ணயம் செய்திருக்கின்றன. உதாரணமாக ஒரு விமான நிறுவனம் கார்பன் நடுநிலையை கோர விரும்பினால், எந்த அளவுக்கு கார்பன் உமிழ்வில் இருந்து அவர்களால் விடுபட முடியவில்லை என்பதை கணக்கிட வேண்டும். அதன் பின்னர் அந்த நிறுவனம், கார்பன் தன்னார்வ சந்தையை உபயோகித்து பிரேசிலில் ஒரு மறு உருவாக்க பண்ணை திட்டத்தில் முதலீடு செய்து அதே அளவு சமமான தொகைக்கு கார்பன் தணிப்பு வரவுகளை கொள்முதல் செய்யலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம், விமான நிறுவனம் கார்பன் நடுநிலையை கோர முடியும். மரங்களின் இயல்பு தன்மை மற்றும் அதன் கார்பன் சுழற்சி ஆகியவற்றால் உமிழ்வு கணக்கீடு மற்றும் மரங்களை அகற்றுதல் சிக்கலானதாகும். எம்ஐடி வல்லுநர் அளித்த அறிக்கை ஒன்றில், இது வெறுமனே மேலும் அதிகமான மரங்களை வளர்ப்பது மட்டுமின்றி, சரியான மரங்களை வளர்ப்பது பற்றியதும், ஏற்கனவே உள்ள வனங்களை பாதுகாப்பதும் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட வரவுகளின் மதிப்பு, நிதி முறையாக செயல்படுகிறதா இல்லையா என அண்மைகாலங்களாக கார்பன் வரவுகள் சந்தை ஆய்வுக்கு உள்ளாகி வருகிறது. கார்ப்பன் தணிப்பை கணக்கீடு செய்யும் நடைமுறை சிக்கலானதாக இருப்பதால், உமிழ்வின் இயல்பை கண்டுபிடித்தல், பருவநிலை மாற்றம் என்பது ஒரு இடத்துக்கும் இன்னொரு இடத்துக்கும் இடையே மாறுபாடாக இருப்பதன் இயல்பு ஆகியவற்றின் காரணமாக வர்த்தக அனுமதிகளை உபயோகிப்பது வரம்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

கடல் மற்றும் கடலோர சூழலியல்களில் பணியாற்றுவது அடிப்படையிலேயே சிக்கலாக இருப்பதால், நீல கார்பன் முயற்சிகளை அதிகரிப்பது என்பது முதன்மையான சிக்கல்களில் ஒன்றாக இருக்கிறது. தரைப்பகுதி சூழல் முறைகளைப் போல இல்லாமல், கடற் பரப்பு என்பது அதன் பன்முக தன்மை கொண்ட இயல்பு காரணமாக அதனை நிர்வகிப்பது மற்றும் கண்காணித்தல் மிகவும் பிரச்னைக்கு உரியதாக இருக்கிறது. எனவே பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் சிக்கலானதாக இருக்கின்றன. வனப்பகுதி கார்பனுடன் ஒப்பிடுகையில் நீல கார்பன் அறிவியல் முதிர்ச்சியற்றதாக இருக்கிறது. அளவிடுவதற்கான வழிமுறைகள், கணக்கில் கொள்ளுதல், கடல் சூழல்முறைகளில் கார்ப்பனை பிரித்தெடுத்தலை சரிபார்த்தல் என்பது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. சொத்தில் கவனம் செலுத்துதல், நுகர்தல், சார்ந்திருத்தல் என்பது பணக்காரர்களுக்கு நலன் தருவதாக இருக்கிறது. பெரும் அளவிலான மக்கள் தொகையினர் வறுமை கொண்டவர்களாக உள்ளனர். இது மற்றும் ஒரு வரம்பாகும்.

தொழில்நுட்ப சவால்கள்

சர்வதேச பருவநிலை மாற்ற ஒப்பந்தங்களின் தேவைக்கு ஏற்ற தரத்தை ஒட்டியதாக நீல கார்பன் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்த தொழில்நுட்ப தடைகள் கடினமானதாக இருக்கின்றன. இந்தத் திட்டத்தின் வடிவத்தின் கீழ் தவறான வகையில் வரவுகள் வைக்கப்படுவதால் பெரும் அளவு கார்பனை வெளியேற்றுபவர்கள் இதனை ஆதரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்த ஒட்டு மொத்த உமிழ்வுகளை குறைப்பதற்கு பதில், மேலும் அதிக கார்பன் வரவுகளை கொள்முதல் செய்வதை நிறுவனங்கள் மேற்கொள்ளும் சாத்தியம் உள்ளது.

வரம்புகளுக்கு இடையேயும், பொருளாதார நன்மைகளைப் பெற பல்வேறு வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் ஈடுபடும் என்பதால் எதிர்கால நீல கார்பட்டன் திட்டங்களுக்கு பெரும் அளவுக்கு எதிர்பார்ப்புகள் உள்ளன. ஒரு தசாப்தத்தின் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச கார்பன் சந்தை விதிகள் 2024ஆம் ஆண்டின் பாகு ஐநா பருவநிலை மாற்ற கருத்தரங்கில் கையெழுத்திடப்பட்டன. கார்பன் சந்தையில் பிணைப்பை உறுதி செய்யும் ஒரு முயற்சியாக, பாரீஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6ன் கீழ் கார்பன் வரவுகளுக்கு பதிவு செய்தல், வர்த்தகம், உருவாக்குதலுக்கான விதிகளை பங்கெடுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டன.

தானாக முன் வந்து ஒத்துழைப்பது என்ற அடிப்படையில் நாடுகள் எவ்வாறு பருவநிலை மாற்ற இலக்குகளை அடைவது என்பதற்கான வரைபடத்தை அது கொண்டிருந்தது. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு மற்றும் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய நீடித்த வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் கார்பன் வரவுகள் வர்த்தகத்தில் வாங்கும் மற்றும் விற்கும் நாடுகள் ஈடுபடுவதை இந்த ஒப்பந்தத்தின் பிரிவு 6.2 ல் விதிகளாக வகுக்கப்பட்டுள்ளன.

வெளிப்படையான கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் வாயிலாக கார்பன் வரவு ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்ய இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரிவு 6.4 என்பது ஒரு கண்காணிப்பு அமைப்பு மூலம் சர்வதேச கார்பன் சந்தை உருவாக்கப்படுவதை கண்காணிப்பதுடன் தொடர்புடையதாகும். இந்த அமைப்பு கார்பன் வரவுகளை வழங்குவதற்கு முன்பாக உறுதியான வழிமுறைகளை உபயோகித்து திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்குகிறது. ஒரு இலக்கை அடைய, தீர்மானித்தலுக்கும் மற்றும் உண்மை நிலவரத்துக்கும் இடையேயான நடுநிலையை இணைப்பதற்கான கருவி என்ற இலக்குடன் 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வுகள் அற்ற நிலையை அடைவது என்பது ஐநாவின் குறிக்கோளாகும்.

இந்த இலக்கு உண்மையில் அடையக்கூடியதுதான் என்பதற்கு பல வெற்றி கதைகள் உள்ளன. மெக்சிகோவின் சான் கிரிசாண்டோ கடலோர சமூகத்தில் 1995ஆம் ஆண்டு 10 நாட்களில் வீசிய இரண்டு சூறாவளிகள் காரணமாக விரிவான பரப்பிலான மாங்குரோவ் காடுகள் அழிவுற்றன. உள்ளூர் மக்கள் மீண்டும் மாங்குரோவ் காடுகளுக்கான உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். மீண்டும் வளர்க்கப்பட்ட மாங்குரோவ் காடுகள் இன்றைக்கு ஒரு பாதுகாப்புக்கான வெற்றிக் கதையாக, நீடித்து நிலைத்திருக்கும் வன விலங்குகள், மீன்பிடித்தல் மற்றும் சூழல் சுற்றுப்பயணம் ஆகியவற்றின் அடிப்படையிலான வாழ்வாதாரத்துக்கு ஆதரவு என கடலோர பகுதிகளை பாதுகாக்கின்றன.

கார்பன் வரவுகளை விற்பதன் மூலம் சிறந்த புதிய பலன்களை இந்த சமூகம் பெறுகிறது. 2024ஆம் ஆண்டு 14.5 மில்லியன் கார்பன் வரவுகளை கொள்முதல் செய்து, கார்பன் வெளியேற்றத்தில் ஷெல் முன்னணியில் உள்ளது. அதன் வரவுகளில் பெரும் பகுதியாக நில உபயோக முயற்சிகளாக, வனத்தில் இருந்து வந்ததாக 9.4 மில்லியன் அமெரிக்கன் டாலருக்கு நெருக்கமாக உள்ளது. டெல்சாவின் 2024ஆம் ஆண்டின் லாப அறிக்கையில் முறைப்படுத்துதல் வரவுகளை விற்றதன் மூலமாக 692 மில்லியன் டாலர் கிடைத்தாக கூறப்பட்டுள்ளது. அவர்களின் நான்காவது காலாண்டு வருவாயில் இது 30 சதவிகிதமாகும்.

இந்தியாவில் கார்பன் சந்தை: சூழலுக்கு ஏற்றது என்பதை தவிர்க்க வேண்டியதன் அவசியம்

உள்நாட்டு கார்பன் வரவு சந்தையை உருவாக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்களின் பசுமை குடில் வாயுக்களை வெளியேற்றுவதற்கு இணையாக சுற்றுச்சூழலில் இது போன்ற உமிழ்வுகளை நீக்குவதற்கு சமமாக முதலீடு செய்வதற்கான முறையை முன்னெடுப்பதற்கான நோக்கத்தை கொண்டுள்ளது. இத்தகைய தணிப்பு நடவடிக்கை திட்டங்கள் வனத்தை மறு உருவாக்கம் செய்தல், புதுப்பிக்க தக்க எரிசக்தி உள்ளிட்டவற்றை போன்றதாக இருக்கலாம்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கார்பன் வரவு வர்த்தக திட்டம் குறித்த வரைவு அறிக்கையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. பிஸ்னெஸ் டுடேவின் 2024ஆம் ஆண்டின் செய்தியின் படி உமிழ்வு தணிப்புகளை உபயோகித்து இந்தியா ஏற்கனவே 652 மில்லியன் டாலர் கார்பன் வரவை ஈ்ட்டியுள்ளது. இந்த திட்டம் சிறு அளவிலான விவசாயிகளிடம் வரவேற்பை பெறும் வகையில் சிறிய பண்ணை திட்டங்களுக்கும் விரைவில் கார்பன் வரவுகள் திட்டம் அமல்படுத்தப்படும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

எனினும், ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, கார்பன் தணிப்பில் ஈடுபட்டதாக ஆதாரமின்றி ஒரு நிறுவனம் கோரும்போது சூழலுக்கு ஏற்றது என்று இப்போது உபயோக்கப்படும் பதத்தை எவ்வாறு தவிர்ப்பது என்பது முக்கியமான சவால் ஆகும். உதாரணமாக மரம் நடுவதற்கான நிதி உதவி அளித்ததாக கூறி கார்பன் வரவை ஒரு நிறுவனம் கோரலாம். இதனை, நீண்டகால கார்பன் பிரித்து எடுத்தல் பலன்களைக் கொண்ட ஒரு வனத்தை உருவாக்குவதோடு ஒப்பிட முடியாது. நிறுவனங்கள் ஒருங்கிணைந்த கார்பன் வரவு சந்தையை நிர்வகிப்பதற்கான பொறுப்புடமையைக் கொண்ட முறைகளுடன், கார்பன் தணிப்பு திட்டங்களை தேர்ந்தெடுப்பதற்கு நிறுவனங்களை அனுமதிக்கும் செயல்பாடுகள் அல்லது அரசின் ஆதரவுடன் கூடிய சட்டங்கள் அனுமதிப்பதாக இருக்க வேண்டும்.

கட்டுரையாளர் - சி.பி.ராஜேந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.