தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ரோட்டுக்கடை ஸ்டைல் கார சட்னி இப்படி செய்ங்க..2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவீங்க! - KAARA CHUTNEY RECIPE IN TAMIL

எப்போதும், இட்லி தோசைக்கு வழக்கமான சட்னியை செய்து சாப்பிட்டு சலித்து விட்டதா? ஒரு முறை ரோட்டுக்கடை ஸ்டைலில் இருக்கும் இந்த கார சட்னியை செய்து பாருங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat Tamil Nadu)

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 20, 2024, 12:26 PM IST

நமது அனைவரது வீட்டிலும், வழக்கமாக செய்யும் இட்லி, தோசைக்கு வழக்கமான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து சாப்பிட்டு சலித்து விட்டதா? வேறு எந்த சட்னி செய்தாலும் நேரம் அதிகமாகிறதா? அப்ப, ஒரு முறை 10 நிமிடங்களில் தயாராகும், இந்த ரோட்டுக்கடை ஸ்டைல் கார சட்னி செய்து பாருங்கள். இந்த கார சட்னிக்கு எத்தனை இட்லி, தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது..

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம் - 10- 15 சின்ன வெங்காயம்
  • பெரிய வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • பூண்டு பல் - 5
  • காய்ந்த மிளகாய்- 5
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

கார சட்னி செய்முறை:

  1. முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கி வைத்த தக்காளி, நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும். (சின்ன வெங்காயம் இல்லையென்றால், பெரிய வெங்காயம் மட்டும் பயன்படுத்தலாம்)
  2. இந்த பொருட்களில், தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைக்கவும்.
  3. இப்போது, ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து பொரிந்த பின் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
  4. அடுத்ததாக, நாம் அரைத்து வைத்த கலவையை சேர்த்து வதக்கவும். பின்னர், அடுப்பை குறைந்த தீயில் வைத்து 5 நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக வைக்கவும்.
  5. 5 நிமிடத்திற்கு பின்னர், எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்தால் காரசாரமான கார சட்னி தயார். இதை, இட்லி, தோசை மற்றும் தயிர் சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
  6. இந்த சட்னியை ஃபிரிட்ஜில் வைக்காமல் வெளியே வைத்திருந்தாலும், மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ட்ரை பண்ணிப்பாருங்க!

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details