ETV Bharat / state

தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்ச மதிப்பிலான 1,200 கிலோ பீடி இலைகள் பறிமுதல்! - THOOTHUKUDI BEEDI LEAVES

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்ச மதிப்பிலான 1,200 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பீடி இலைகள்
பீடி இலைகள் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 6:04 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது மஞ்சள் மற்றும் பீடி இலைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதை தடுப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர்.

இதையும் படிங்க: 'இந்த பொங்கலை மறக்கவே மாட்டோம்'.. சென்னை சூளைமேட்டில் கோலாகலமாக நடந்த சமத்துவ பொங்கல்...!

அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 40 மூட்டை பீடி இலைகள் சுமார் 1,200 கிலோ இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவற்றை கைப்பற்றிய கியூ பிரிவு போலீசார், மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ. 30 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.